ஒன்லைனில் படிக்க ஜபோன்!! -ஏழை மாணவிக்கு வாங்கி கொடுத்த டாப்சி-

ஆசிரியர் - Editor III
ஒன்லைனில் படிக்க ஜபோன்!! -ஏழை மாணவிக்கு வாங்கி கொடுத்த டாப்சி-

கர்நாடகாவை சேர்ந்த வசதி குறைந்த மாணவி ஓன்லைன் வகுப்பு ஊடாக தனது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்று நடிகை டாப்சி ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர், 12 ஆம் வகுப்பு தேர்வில் 96 சதவீத மதிப்பெண்களை எடுத்துள்ளார். மேலும், அவர் நீட் தேர்விற்கு படிக்க தயாராகி வருகிறார். 

அதற்கான கல்வி கட்டணத்தை அவரது தந்தை கடன் வாங்கியும், நகைகளையும் விற்றும் கட்டியுள்ளார். இருப்பினும் அந்த மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க தேவையான ஸ்மார்ட்போன் இல்லை என்று செய்திகள் வெளியானது. 

இதை பார்த்த நடிகை டாப்சி அந்த மாணவிக்கு புதிய ஐபோன் ஒன்றை வாங்கி அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் டாப்சி. 

இதுகுறித்து டாப்சி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பெண்கள் அதிகம் படிக்க வேண்டும், 

அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும். நமக்கு அதிக டாக்டர்கள் அவசியம். அதற்காக இது என்னுடைய ஒரு சிறு முயற்சி என்று கூறியுள்ளார்.

Radio