கைதிக்கு சர்வதேச அங்கிகாரம்

ஆசிரியர் - Editor II
கைதிக்கு சர்வதேச அங்கிகாரம்

கார்த்தி நடிப்பில் லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

லோகேஸ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இதில் கார்த்தி ஆயுள் தண்டனை கைதியாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமா ரசிகர்களை எல்லாம் கடந்து, இந்தியளவில் பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்ற இப்படம் தியேட்டர்களில் வசூலையும் குவித்தது. இந்நிலையில், டொரோண்டோ சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட கைதி திரைப்படம் தேர்வாகி உள்ளது. 

ஆகஸ்ட் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை திரையிடப்படும் என்று இயக்குனர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.