உடல் எடையை குறைத்த விஜய் ஆண்டனி!! ஏன் தெரியுமா?

ஆசிரியர் - Editor II
உடல் எடையை குறைத்த விஜய் ஆண்டனி!! ஏன் தெரியுமா?

பிச்சைக்காரன்-2 படத்திற்காக நடிகர் விஜய் ஆண்டனி தனது உடல் எடையை பெருமளவாக குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் ஆண்டனி நடித்த படங்களில் நீண்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடி, அதிக வசூல் செய்த படம், ‘பிச்சைக்காரன்.’ சசி இயக்கிய அந்தப் படம், தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டு அங்கும் அதிக வசூல் செய்தது. 

அதைத் தொடர்ந்து ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க விஜய் ஆண்டனியின் பட நிறுவனம் முடிவு செய்தது. இதை பிரியா கிருஸ்ணசாமி இயக்குகிறார். 

இதுபற்றி தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி கூறியதாவது: “பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம், அதே பெயரிலேயே உருவாகிறது. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். 

அவருக்கு ஜோடியாக நித்யாமேனன் அல்லது அவரைப் போன்ற நடிப்புத் திறன் மிகுந்த கதாநாயகி நடிப்பார். பிரியா கிருஷ்ணசாமி இயக்குனராக அமைந்தது படத்தின் வெற்றியை உறுதி செய்து இருக்கிறது.

விஜய் ஆண்டனி நடித்த படங்களிலேயே மிக அதிக செலவில் தயாராகும் படம், இதுதான். படத்துக்காக அவர் உடல் எடையை 15 கிலோ குறைத்து இருக்கிறார். 

ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் வாபஸ் பெற்று படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்ததும், ‘பிச்சைக்காரன்-2’ படம் வளர ஆரம்பிக்கும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Radio