SuperTopAds

படையினருக்கு வழங்கப்பட்டதைபோல் தமக்கும் பாடசாலைகளை தருமாறுகோரி வடமாகாண கல்வி சமூகத்தை அச்சுறுத்தும் பொலிஸார், காரணம் இதுவே..

ஆசிரியர் - Editor I
படையினருக்கு வழங்கப்பட்டதைபோல் தமக்கும் பாடசாலைகளை தருமாறுகோரி வடமாகாண கல்வி சமூகத்தை அச்சுறுத்தும் பொலிஸார், காரணம் இதுவே..

பொலிஸ் நிலையங்களில் அதிகளவான மக்கள் கூடுவதால் கொரோனா ஆபத்தை தவிர்க்கும் வகையில் பாடசாலைகளில் பொலிஸ் நிலையங்களை இயக்குவதற்கு முயற்சிக்கப்படுகிறது. இதுவே பொலிஸார் பாடசாலைகளை கேட்க காரணம் என கூறப்படுகின்றது. 

வடமாகாணத்தில் படையினர் பாடசாலைகளை கோரிவரும் நிலையில் பொலிசாரும் தற்போது பாடசாலைகளைக் கோரி வருகின்றனர். இந்த வகையில் பொலிஸ் நிலையங்களிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் மக்கள் தொடர்பாடல்களை ஏற்படுத்தி அங்கே 

மக்களிற்கான பணிகளையாற்றும் சமயம் பொலிஸ் நிலையங்களை பாதுகாக்க முடியும் எனப் பொஸார் கருதுகின்றனர். இதற்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியும் கிளிநொச்சியிலும் முதல்கட்டமாக கோரியுள்ளபோதிலும் 

அவற்றினை வழங்க பாடசாலைகளின் பழைய மாணவர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிப்பதனால் பொலிசாரிற்கு இதுவரை பாடசாலைகள் வழங்காதபோதிலும் இது தொடர்பான அழுத்தங்கள் தொடர்வதாக 

கல்விச் சமூகம் சுட்டிக்காட்டுகின்றது. இதேநேரம் விடுமுறையில் சென்ற படையினரை தங்க வைப்பதற்காக ஏற்கனவே படையினர் அதிக பாடசாலைகளை கோரியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.