SuperTopAds

அம்மா நான் இறந்து கொண்டிருக்கின்றேன்..! சோகத்தில் ஆழ்த்திய வியட்னாம் பெண்ணின் இறுதி குறுஞ்செய்தி..

ஆசிரியர் - Editor I
அம்மா நான் இறந்து கொண்டிருக்கின்றேன்..! சோகத்தில் ஆழ்த்திய வியட்னாம் பெண்ணின் இறுதி குறுஞ்செய்தி..

“மன்னிக்கவேண்டும் அம்மா, அப்பா நான் இறந்து கொண்டிருக்கிறேன்.. என்னால் மூ ச்சுவிட முடியவில்லை..” என வியட்னாம் நாட்டு பெண் ஒருவா் இறப்பதற்கு முன்னா் தன் தாய், தந்தையருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லண்டனுக்கு வருவதுக்கு முகவருக்கு £30.000 செலுத்தி வந்துள்ளார். கிரேஸில் உள்ள தொழிற்சாலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலனில் உயிரிழந்த 39 பேரில் ஒருவர் வியட்நாமியப் பெண் ட்ரா மை என்று அழைக்கப்பட்ட 26 வயதான 

அந்தப் பெண் உயிரிழந்தவர்களில் ஒருவராக இருக்கலாம் என்று ஹனோயைச் சார்ந்த மனித உரிமைகள் குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழப்பதற்கு முன்னர் அவர் கொள்கலனில் இருந்து தொடர்ச்சியாக 

இறுதி குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர்.அவரது குறுஞ்செய்திகளின்படி “மன்னிக்கவும் அம்மா, அப்பா. வெளிநாட்டிற்கான எனது பாதை வெற்றிபெறவில்லை. 

அம்மா நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்! நான் இறந்து போகிறேன்.. என்னால் மூச்சுவிட முடியவில்லை. நான் Nghen இலிருந்து புறப்பட்டேன்..என்னை மன்னிக்கவும் அம்மா, அப்பா” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர் அனுப்பிய குறுஞ்செய்திகளின் நேரங்கள் செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பப்பட்டதைக் குறிக்கின்றன என்று கூறப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் 31 ஆண்கள் மற்றும் 

எட்டு பெண்கள் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ட்ரா மை யின் குடும்பத்தினர் தமது மகளின் உடலை அடையாளம் உதவி தேவை என்று தெரிவித்துள்ளனர்.