SuperTopAds

2012 ஆம் ஆண்டு பிஃபா கிண்ண போட்டிகளில் விளையாடவுள்ள அணிகள் இதோ

ஆசிரியர் - Admin
2012 ஆம் ஆண்டு பிஃபா கிண்ண போட்டிகளில் விளையாடவுள்ள அணிகள் இதோ

ரஷ்யாவில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு போட்டியை நடத்தும் ரஷ்யா உட்பட 32 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

கடந்த இருவருடங்களாக 6 பிரிவாக இடம்பெற்ற தகுதிச்சுற்று போட்டிகளின் அடிப்படையில் குறித்த அணிக்ள தெரிவு செய்யப்பட்டுள்ள.

இதில் ஆசியா கண்ட பிரிவில் ஈரான், தென் கொரியா, ஜப்பான், சவூதி அரேபியா ஆகிய அணிகள் குழு நிலையில் தகுதி பெற்றுள்ளதுடன், அவுஸ்திரேலிய அணியும் தகுதி பெற்றுள்ளது.

ஆப்பிரிக்கா கண்ட பிரிவில் துனிசியா, நைஜீரியா, மொரோக்கோ, செனகல் மற்றும் எகிப்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளதுடன், வட அமெரிக்கா கண்ட பிரிவில் மெக்ஸிகோ, கோஸ்ட்டாரிக்கா, பனாமா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

அத்துடன், தென் அமெரிக்கா கண்ட பிரிவில் பிரேசில், உருகுவே, அர்ஜென்டினா, கொலம்பியா மற்றும் பெரு ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இதேவேளை, பல பிரிவுகளில் இடம்பெற்ற ஐரோப்பா கண்ட தகுதி சுற்று போட்டிகளில் பிரான்ஸ், ஜேர்மனி, போர்த்துக்கல், செர்பியா, போலந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், ஐஸ்லாந்து, சுவிஸ்சர்லாந்து, குரோஷியா, டென்மார்க், மற்றும் சுவீடன் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில் சர்வதேச கால்பந்தாட்ட வரலாற்றில் முக்கிய அணிகளாக திகழும், இத்தாலி, சிலி, ஐக்கிய அமெரிக்கா, நெதர்லாந்து, வேல்ஸ் மற்றும் ஐவொரிகோஸ்ட் ஆகிய அணிகள் இம்முறை உலக கிண்ண போட்டிகளுக்கான தகுதியை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.