வடக்கில் 131 விகாரைகளை கட்டும் நல்லாட்சி வேடதாாிகளின் திட்டத்தில் ஒன்றே நாவற்குழி விகாரை..! ரவிகரன் காட்டம்..
வடபகுதி விகாரகள் மயமாக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பிர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் யாழ் மாவட்டத்தின் நாவற்குழிப் பகுதியில் அமைக்கப்பட்ட விகாரை, இராணுவத்தின் பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.
இச் சம்பவத்தினை மேற்கோள் காட்டி, இன்றைய தினம் ரவிகரன் தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கில் விகாரைகள் மயமாகின்றன. கொக்கிளாயில் பௌத்தர்கள் இல்லாத இடத்தில் தமிழ் மக்களின் காணிகளை பறித்து இராணுவ உதவியுடன் பொளத்த பிக்கு, விகாரை அமைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.இவ்விடயம் தடுத்து நிறுத்தப்படாதுவிட்டால்,
நல்லூரில் விகாரை தோன்றுவது மிகவிரைவில் நடக்கலாம் என்ற கருத்தினை நான் வடமாகாணசபையின் 123ஆவது அமர்வில் தெரிவித்திருந்தேன்.இன்று அதற்கு ஏற்றவகையிலே நாவற்குழியில் நேற்றைய தினம் விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்குப் பகுதியில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்படியே கடந்த 2017ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 03ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் இப்படியான எதிர்வுகூறலகள் அங்கே கேள்வி பதில் நடவடிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அதன்படி யாழ் மாவட்டத்தில் 06விகாரைகள், கிளிநொச்சி மாவட்டத்தில் 03விகாரைகள், மன்னார் மாவட்டத்தில் 20விகாரைகள், வவுனியா மாவட்டத்தில் 35விகாரைகள், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67விகாரைகள் என்ற வகையில் தொல்பொருள் திணைக்களத்தினால்
131விகாரைகள் வடக்கில் இருப்பதாக தொல் பொருள் திணைக்களத்தின் அறிக்கையின்படி உள்ளதாகவும், அல்லது இருந்ததாவும் அங்கு பாராளுமன்றில் சுட்டிக்காட்டி பேசப்பட்டுள்ளது.இவ்வாறாக விகாரைகள் பௌத்தர்கள் இல்லாத இடத்தில் அமைத்து,
வடக்கின் முழு இடங்களையும் பௌத்த மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்பானதாக அன்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.இருந்தும் மக்கள் இடம்பெயரும்போது ஒரு விகாரை கூட முல்லைத்தீவில் இருந்ததில்லை.
இடம்பெயர்வதற்கு முன்பும், பல ஆண்டுகாலமாக, காலங்காலமாக எங்களுக்குத் தெரிந்தவகையில், அல்லது அதற்கு முன்போ விகாரைகள் இருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. எங்களுடைய முன்னோர்களும் அதைத்தான் கூறிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த வகையில் அங்கு பாராளுமன்றில் எதிர்வுகூறப்பட்ட 67விகாரைகள் என்றவகையில் பார்க்கும்போது, இப்போது கொக்கிளாயில் ஒருவிகாரை, நாயாற்றில் ஒருவிகாரை, வட்டுவாகலில் விகாரை, கேப்பாப்புலவில் விகாரை, மாங்குளத்தில் விகாரை இப்படியாக தொடர்ச்சியாக
விகாரைகளை அமைத்துக்கொண்டுவருகின்றனர். இவ்வாறு அமைக்கப்படும் விகாரைகள் அனைத்தும் எந்தவொரு பௌத்தக் குடும்பங்களும் இல்லாத இடத்திலேயே அமைக்கப்பட்டு வருகின்றன. இங்கு மதத்திணிப்பு இடம்பெறுகின்றது.
மதத்தினூடாக எங்களுடைய மக்களின் தனியார் காணிகளிலும், மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட காணிள், பௌத்தர்களே இல்லாத தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற அரச காணிகளில் பௌத்த மதத் திணிப்பைச் செய்துகொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.
இந்த வகையில்தான் நேற்றைய தினம் நாவற்குழியிலும் அந்த விகாரையினைத் திறந்துவைத்துள்ளார்கள். இந்த விகாரை திறந்து வைத்ததில் எல்லோருக்கும் தெரியக்கூடிய ஒரு விடயம், இன்று போர் நடக்கவில்லை, அல்லது எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆயுதம் தாங்கிய ஒரு குழுக்கள் இல்லை
இந்த நிலையில் இராணுவம் அங்கே குவிக்கப்பட்டு, இராணுவத்தின் பாதுகாப்புடன் அந்த விகாரையினைத் திறந்து வைத்துள்ளனர்.இப்படியாக ஒரு ஜனநாயக ரீதியிலான நாடு என்று சொல்லிக்கொண்டு இராணுவத்தினருடைய பாதுகாப்புடன் பௌத்தர்கள் இல்லாத இடங்ளில் கொண்டுவந்து
பௌத்த மயமாக்கலினையும் செய்துகொண்டிருக்கின்றார்கள்இப்படியான அடக்குமுறைகளினூடாக தமிழ மக்களின் பூர்வீக இடங்களில் மேற்கொள்ளப்படும் இந்தத் திணிப்புக்களை தமிழ் மக்ள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
என்பதை இதனூடாக தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இதனூடாக தமிழ் மக்களின் எந்த ஒரு அரசாங்கமும் வெல்லமுடியாது மாறாக, தமிழ்மக்கள் இப்படியான திணிப்புகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. இவற்றிற்கான பதிலை ஒருகாலத்தில்
சொல்லவேண்டிய நிலையை இப்படியான திணிப்பாளர்களுக்கு இயற்கை ஏற்படுத்தும். என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.