SuperTopAds

டென்மார்க்கில் திறக்கப்பட்டது சுழல் பார்வையாளர் கோபுரம்!

ஆசிரியர் - Admin
டென்மார்க்கில் திறக்கப்பட்டது சுழல் பார்வையாளர் கோபுரம்!

மரங்களின் உச்சிகளுக்கு இடையிலான நடைபாதை பார்வையாளர் கோபுரம் ஒன்றை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்துள்ளது டெர்மார்க் நாடு.

டென்மார்க் நாட்டின் தலைநகர் கொப்பன்ஹாபனின் தெற்கே ஒரு மணிநேர மழுகிழுந்தில் செல்லும் தூரத்தில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் 18 ஏக்கர் நிலப்பரப்பில் 45 மீற்றர் உயரத்தில் 148 சுழல்களைக் கொண்ட பார்வையாளர்கள் காட்டு மரங்களையும், கடற்கரை மற்றும் இயற்கையை இரசிக்கும் வகையில் கோபுரம் ஒன்று பூங்காவுடன் கட்டியெழுப்பப்பட்டது.

இக்கோபுரம் பார்வையாளர்கள், சுற்றுலாப் பயணிகள் இயற்கையோடு நெருங்கி இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோபுரம் 10 சுழல் பாதைப் படிகளைக் கொண்டது. மேடைப்பகுதி கடல்மட்டத்திலிருந்து 135 மீற்றர் உயரம் கொண்டது.

இப்பூங்கா காட்டு மரங்களின் நடுவே உயரமாக எழுப்பப்பட்டுள்ளது. இயற்கையான மரங்களுடன் ஒன்றித்து இருப்பதற்கும் இரசிப்பதற்கும் ஏதுவாக அமைந்துள்ளது. கோபுரத்தின் உச்சியிலிருந்து கடற்கரை மற்றும் காட்டு மரங்களின் உச்சியையும் வானிலிருந்து பார்ப்பது போன்று வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.