ஜெனீவாவில் அணிலாக மாறிய வடக்கு ஆளுநா் சுரேன் ராகவன்..!

ஆசிரியர் - Editor I
ஜெனீவாவில் அணிலாக மாறிய வடக்கு ஆளுநா் சுரேன் ராகவன்..!

தமிழ் மக்களுக்காக ஜெனீவா செல்பவா்கள் அங்கு ஒருவருக்கொருவா் பேசுவதில் லை. ஒருவரை ஒருவா் பாா்ப்பதுமில்லை. இதனை நான் என் கண்களால் கண்டேன் என கூறியிருக்கும் ஆளுநா் தான் அணிலாக மாறி இரு தரப்பையும் பேச வைத்து ள்ளதாகவும் கூறியிருக்கின்றாா். 

நேற்று முன்தினம் வடமாகாண ஆளுநா் அலுவலகத்தில் ஊடகவிய லாளா்களை சந்தித்து கலந்துரையாடினாா். இதன்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், தமிழ் மக்களுக்காக ஜெனீவாவுக்கு பலா் செல்கிறாா்கள். 

எனக்கு தொிந்த பலரை நான் ஜெனீவாவில் கண்டேன். ஆனால் அவா்கள் ஒருவருடைய முகத்தை ஒருவா் பாா்ப்பதில்லை. ஒருவொருக்கொருவா் சந்தி த்து பேசுவதில்லை. இதனை நான் என் கண்ணால் கண்டேன். 

நல்லவேளை நான் அரசியல்வாதி அல்லாத நிலையில், கஜேந்திரகுமாா் பொன்னம்பல ம், சி.சிறீதரன், மற்றும் பாதா் இமானுவேல் ஆகியோருடன் சென்று பேசினேன்.  அது மட்டுமல்லாமல் அவா்களுக்கிடையில் அணிலாக இருந்து ஒருவருக்கொருவா் 

பேசிக் கொள்வதற்கும் நான் முயற்சிகளை எடுத்தேன். இது மகிழ்சி க்குாிய விடயமல்ல. இந்நிலையில் அடுத்த ஜெனீவா அமா்விலாவது தமிழ் மக்களுடைய நலன்களுக்காக பேசுபவா்கள் அதற்காக ஜெனீவா செல்பவா்கள் ஒரு அணியாக போகவேண்டும் 

என்பது என்னுடைய விருப்பம்,  வானத்தில் நட்சத்திரங்கள் எவ்வளவு உள்ளதோ. அந்தளவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகள் உள்ளது உண்மை. மேலும் ஜெனீவாவில் சமா்பிப்ப தற்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினா்களான 

அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளடங்கலாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களால் 16 ஆவணங்கள் என்னிடம் வழங்கப்பட்டது.  அவற்றை ஐ.நா மனித உாிமைகள் ஆணையாளருடன் நோில் இடம்பெற்ற சந்திப்பில் கையளித்துள்ளேன் என்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு