கோடிகள் செலவில் கோபுரங்களை கட்டும் தீவக மக்களே..! இதையும் கொஞ்சம் பாருங்கள்..

ஆசிரியர் - Admin
கோடிகள் செலவில் கோபுரங்களை கட்டும் தீவக மக்களே..! இதையும் கொஞ்சம் பாருங்கள்..

வேலணை வடக்கு மயிலப்புலம் கிராமப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையாகும். இப்பாடசாலை பலநூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய தமிழ் மணம் பரப்பிய பாடசாலை.1990ம் ஆண்டுவரை இயங்கிய பாடசாலை நாட்டின் யுத்த சூழ்நிலையால் மூடப்பட்டது. இக்கிராம மக்களும் இடம்பெயர்ந்து உலகம் பூராகவும் புலம்பெயர்ந்து வசிக்கின்றனர்.

இடம்பெயர்வுடன் கிராமமும் இடம்பெயர்ந்தது. ஆனால் மீளவும் வந்தோர் மிக குறைவு. ஆனால் பாடசாலையும் அதனை சுற்றியுள்ள குடிமனையும் புதர்மண்டி சிறு காடுகளாகவே உள்ளது. கட்டடங்களை மூடி காணிகளும் களனிகளும் தெரியாதளவுக்கு பற்றைகளாகவே உள்ளது. பாடசாலையும் அதே போல் காடுமண்டி கிடக்கின்றது.

கவனிப்பாரற்று அழியும் நிலையில் உள்ளது. புலம்பெயர் தேசங்களில் பாடசாலையின் பெயரினைத் தாங்கிய பல சங்கங்களும் அமைப்புகளும் உள்ளது. இருந்தும் இப் பாடசாலையை கவனிப்பாரற்று உள்ளது. மீளவும் இப் பாடசாலையை இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு