மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயா்த்தும் யோசனையை நிறுத்துங்கள். ஆளுநருக்கு நீண்ட கடிதம்.

ஆசிரியர் - Editor I
மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயா்த்தும் யோசனையை நிறுத்துங்கள். ஆளுநருக்கு நீண்ட கடிதம்.

வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலை களாக தரம் உயா்த்தும் யோசனையை நிறுத்தவேண்டும். மாகாணசபைகளுக்கான அதி காரங்களை பூரணப்படுத்துவது குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இருக்கும் அதிகாரங்களையும் மத்திக்கு தாரைவாா்ப்பதை சகித்துக் கொள்ள முடியாது. 

மேற்கண்டவாறு முன்னாள் வடமாகாணசபை எதிா்க்கட்சி தலைவா் சி.தவராசா கூறியுள் ளாா். இது தொடா்பாக சி.தவராசா ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்படி விட யத்தை கூறியுள்ளாா். அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,  இது தொடா் பாக அவர் ஆளுநரிற்கு ஓர் நீண்ட வேண்டுகோள் கடிதமொன்றினை எழுதி உள்ளாா்.

அதன் பிரதிகள் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகல பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எமக்கு இருக்கும் அற்ப அதிகாரங்க ளையும் மீண்டும் மத்திக்குக் கையளிக்கும் வகையில் ஆளுநர் எடுக்கும் முயற்சிகளை அரசிற்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் தடுக்க முன்வருமாறும் 

அவர்களிடம்கோரியுள்ளார். ஆளுநரிற்கு அவரினால் அனுப்பப்பட்ட வேண்டுகோள் கடித த்தில் மேலும்குறிப்பிடப்பட்டுள்ளதாவது,தாங்கள் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் வேண்டுகோளின் அடிப்படையிலும் வடக்கின் 14 பாடசா லைகளைத் தேசியபாடசாலைகளாக்குவதற்கு முயற்சித்து வருகின்றீர்கள் 

என அறிகின்றேன். இப் பாடசாலைகளைத்தேசிய பாடசாலைகளாக்குவது என்பது வடக்கு மாகாண சபையின் அதிகாரத்திற்கு உட்பட்டபாடசாலைகளை மத்திய அரசின் அதிகார வரம்பின் கீழ்க் கொண்டு வருவதற்கான ஓர்முயற்சியாகும்.அரசியலமைப்பின் பதின் மூ ன்றாவது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாணத்திற்கான அதிகாரப் பகிர்வுமுறை 

அறிமுகப்படுத்தப்பட்டபோது தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மா காண சபையின் அதிகார வரம்பிற்குள் வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை தேசியபாடசாலைகள் என்றால் என்ன என்பதற்கு ஒரு விதமான வரைவிலக்கணமும் கொ டுபடவில்லை.பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ள இந்த குறைபாட்டினை 

தமக்கு சாதகமாகப்பயன்படுத்தி முந்நாள் ஜனாதிபதி உட்பட பல அமைச்சர்கள் பல பா டசாலைளைத்தான்தோன்றித்தனமாகப் தேசிய பாடசாலைகள் ஆக்கியுள்ளனர். இக் கு றைபாடு அரசியலமைப்புமாற்றம் தொடர்பான சகல மட்டத்திலான கலந்துரையாடல்க ளிலும் சுட்டிக் காட்டப்பட்டதன்விளைவாக அண்மைக் காலங்களில் 

இவ்வாறான செயற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லைஎன்பதனைத் தங்கள் மேலான கவ னத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.தமிழ் மக்கள் தாம் வாழும் பிரதேசங்களில் அ திகாரப் பகிர்வை வேண்டி நீண்ட காலமகாகநடாத்திய போராட்டங்களின் விளைவினால் ஏற்பட்ட, இலங்கை இந்திய ஒப்பந்த்தினைத்தொடர்ந்து உருவாக்கப்பட்டதே 

பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் ஆகும். பதின்மூன்றாவதுதிருத்தச் சட்டத்தில் குறிப்பி டப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பான பல விடயங்கள் இன்னும்முழுமையாக நடை முறைப்படுத்தப்படவில்லை. அண்மையில் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி கூட பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் 

முழுமையாகஅமுல்ப்படுத்தப்படல் வேண்டும் என்பதனைச் சுட்டிக் காட்டி உள்ளா ர். பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்தைத் தொடர்ந்து இலங்கையில் கூடிய அதிகாரப் பகிர்வுடனானஅரசியலமப்பு அமைய வேண்டுமென்ற அடிப்படையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

இம்முயற்சிகளில் குறிப்பிடத் தக்கவைகளாவன சந்திரிகா அம்மையாரினால் ஆகஸ்ட் 2007 இல்சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு மாற்றத்திற்கான வரைபிலும், யுPசுஊ என்றுசொல்லப்படுகின்ற பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான குழுவினது அரசியலமைப்புமாற்றத்திற்கான பரிந்துரையிலும், 

தற்போதைய அரசினால் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்புமாற்றத்திற்கான மக்கள் கருத்தறிகுழுவினது பரிந்துரையிலும், அரசியல் நிர்ணய சபையினால் சமர்ப்பிக்கப் பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றத்திற்கான பரிந்துரையிலும், சகல பாடசாலை களும்மாகாண சபையின் அதிகார வரம்பிற்குள்ளே வரவேண்டுமெனவே 

சிபார்சு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறாக மாகாண சபையின் அதிகாரங்களை முழுமையாக்கி மேலும் செழுமைப்படுத்தப்படவேண்டிய வழி வகைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் இச் சூழலில் மாகாண சபைகளின்அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் 

என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.இவ்வாறான செயற்பாட்டின மூலம் மத்தியினுடைய நிதிப் பங்கீட்டில் மேலும் கூடிய நிதியினைஇப் பாடசாலைகளிற்கு பெற்றுக கொள்ளலாம் என்பது தங்கள் குறிக்கோளாக இருக்கும் ஆயின்கல்வி அமைச்சின் ஊடாக நேரடியாகத் தங்களால் தெரிவு செய்யப்படும் பாடசாலைகளிற்கு 

அந்நிதியினை வழங்கக் கூடிய ஏற்பாடுகளைச் செய்ய முடியும். இது ஓர் சாதாரண நிறைவேற்றுச் செயற்பாட்டின் மூலம் செயற்படுத்தக் கூடிய விடயம். கிடைத்த அர்ப்ப அதிகாரங்களையும் மீண்டும் மத்திக்குக் கையளித்துத்தான் செயற்படுத்த வேண்டும் என்று இல்லை.இப் பாடசாலைகள் தரமான பாடசாலைகளாக இருந்தும் ஆளுமையாக நிர்வகிக்கப்படவில்லை,

அதனால் தான் மத்திக்குக் கையளிக்க வேண்டும் எனவும் அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.தங்களது நிறைவேற்றுச் செயற்பாட்டின் கீழ்தான் இப்பாடசாலைகள் உள்ளதால். அவற்றைத்;திறம்பட செயற்படவைப்பதற்கான சகல அதிகாரமும் தங்களிற்கு உள்ளது என்பதனைத்தங்களிற்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.கடந்த ஐந்து வருடங்களாக வட மாகாணத்தின்

 செயற்பாடுகள் ஆளுமையற்றவினைத்திறனற்றவையாக அமைந்தவை என்பதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அதுஅதிகாரப் பகிர்வில் உள்ள குறைபாடு அல்ல. அதிகாரத்தில் இருந்தவர்களின் குறைபாடே ஆகும்.ஆதலினால் மேற்படி தங்கள் முயற்சியினை உடனடியாக நிறுத்த வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு