நீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு கல்லுண்டாய் வெளியில் காணிகளுடன், வீடு.. 50 குடும்பங்களுக்கு மறுவாழ்வு.

ஆசிரியர் - Editor I
நீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு கல்லுண்டாய் வெளியில் காணிகளுடன், வீடு.. 50 குடும்பங்களுக்கு மறுவாழ்வு.

யாழ்.நகாில் அரச காணிகளில் குடியிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பெயாில் வெளியேற்றப்பட்ட மக்க ளுக்கு யாழ்.கல்லுண்டாய் வெளி பகுதியில் வீட்டு திட்டம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துாிதப்படுத்தப்ப ட்டுள்ளதாக யாழ்.பிரதேச செயலகம் தொிவித்துள்ளது. 

இது தொடர்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது, யாழ்ப்­பா­ணம் பிர­தேச செய­ல­கத்­துக்­குட்­பட்ட அர­ச­கா­ணி­க­ ளில் தங்­கி­யி­ருந்து, நீதிமன்ற உத்­த­ர­வின் பேரில் வெளி­யேற்­றப்­பட்டு வீடு­கள் இல்­லாத மக்­க­ளுக்கு முதற்கட்­ட­ மாக வீடு­கள் அமைக்­கும் பணி­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் நிதி­யில் 50 பேருக்­கான வீடு­கள் மாவட் டச் செய­ல­கத்­தின் ஊடாக அமைக்­கப்­ப­ட­வு ள்­ளன. தலா ஒரு­வ­ருக்கு 2 பரப்பு அரச காணி கல்­லுண்­டாய் பகு­தி­யில் வழங்­கப்­பட்டு 10 லட்­சம் ரூபா பெறு­ம­தி­ யான வீடு­கள் அமைக்­கும் பணி­கள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன.

அதனைத் தொடர்ந்து கிடைக்­கும் நிதி ஒதுக்­கீ­டு­கள் மூலம் ஏனை­ய­வர்­க­ளுக்­கான வீடு­கள் அமைக்­கும் பணி­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு