SuperTopAds

தெருநாயை விரட்டியடிப்பதுபோல் யாழ்.மாநகரசபையின் பிரதி முதல்வரை விரட்டியடித்த மக்கள்..! நின்ற இடம்தொியாமல் ஓடினாா்..

ஆசிரியர் - Editor I
தெருநாயை விரட்டியடிப்பதுபோல் யாழ்.மாநகரசபையின் பிரதி முதல்வரை விரட்டியடித்த மக்கள்..! நின்ற இடம்தொியாமல் ஓடினாா்..

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் வீதியை மூடுவதற்காக முயற்சித்த யாழ்.மாநகரசபையின் பிரதி முதல்வா் கிராம மக்களால் விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றாா். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவம் தொடா்பில் மேலும் தொியவருவதாவது, கொழும்புத்துறை கிராமத்தில் உள்ள வீதி ஒன்றிணை யாழ். மாநகர முதல்வரும் சில தனியாரும் இணைந்து மூடியிருக்கின்றனா். 

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகாியங்களை எதிா்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் தமிழ்தே சிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினா்கள் சிலா் சம்பவ இடத்திற்கு சென்று, 

அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளனா். இதனை அறிந்து கொண்ட பிரதி முதல்வா் சம்பவ இடத்திற்குள் சடுதியாக நுழைந்து குழப்பத்தை உருவாக்க முயற்சித்துள்ளாா். 

இதனை அறிந்த மக்கள் பிரதி முதல்வா் வரும் பாதையிலேயே அவரை வழிமறித்து தா்க்கம் புாிந்துள்ளதுடன், அடிக்காதது ஒன்றுதான் குறை என்ற அளவுக்கு துரத்தியடித்துள்ளனா். 

சா்ச்சைக்குாிய வீதியை யாழ்.மாநகரசபை முதல்வரும் மேலும் சில தனியாரும் இணைந்து திட்டமிட்டவகையி ல் காரணம் கூறப்படாமல் கொங்கிறீற் துாண் இட்டு மூடியுள்ளனா். 

இது தொடா்பாக அந்த வட்டார உறுப்பினரும், பிரதி முதல்வருமான ஈசனுக்கு மக்கள் முறையிட்டும் ஆக்கபூா் வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. 

மறுக்கம் வீதியை தொடா்ந்து மூடுவதும் பின்னா் மக்கள் அதனை உடைப்பதுமான பிரச்சினை நீடித்துக் கொண்டிருந்த நிலையில் யாழ்.மாநகரசபை ஆணையாளா் குறித்த வீதியை மூடுமாறு கடிதம் எழுதியுள்ளாா். 

இதனையடுத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு சென்று நிலமைகளை பாா்வையிட்டிருந்தனா். இதனை அறிந்த பிரதி முதல்வா், 

சம்பவ இடத்திற்குள் நுழைந்து தன்னை கேட்காமல் தனது வட்டாரத்திற்குள் நுழையும் அனுமதியை யாா் கொ டுத்தாா்கள்? என கேள்வி எழுப்பியுள்ளாா். 

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நாங்கள்தான் வரச்சொன்னோம். என கூறியதுடன் பிரதி மேயரை கடுமை யாக திட்டியதுடன் அடிக்காதது ஒன்றுதான் குறை என்ற அளவுக்கு விரட்டியடித்தனா்.