SuperTopAds

தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட இராணுவ தளபதி ஒருவருக்கு ஒட்டுசுட்டான் காட்டுக்குள் அஞ்சலியாம்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட இராணுவ தளபதி ஒருவருக்கு ஒட்டுசுட்டான் காட்டுக்குள் அஞ்சலியாம்..

முல்லைத்தீவு- கொக்காவில் பகுதியில் பாடசாலை மாணவா்கள் பயணித்த பேருந்து மீது தாக்குதல் நடாத்தி ப ல மாணவா்களை படுகொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு படுகொலைகளை செய்த இலங்கை இராணுவத்தி ன் ஆழ ஊடுருவும் படையணியின் தளபதி லெப்.கேணல் லலித் ஜெயசிங்கவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

வன்னிக் காட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய சமயத்தில், விடுதலைப்புலிகளின் முறியடிப்பு அணிகளின் தாக்கு த லில் மரணமான இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி (Long Range Reconnaissance Patrol -LRRP) தளபதியான லெப்.கேணல் லலித் ஜெயசிங்கவின் நினைவாக, 

நேற்று முல்லைத்தீவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் காட்டு பகுதியில், லலித் ஜெயசிங்க உயிரிழந்த இடத்தில்- அவரது மனைவி, மகள், பெற்றோரால் மரக்கன்றுகள் நடப்பட்டன. அடர்ந்த காட்டுக்குள், ஜி.பி.எஸ் துணையுடன் சுமார் 2.7 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்றே, 

அவர் கொல்லப்பட்ட இடத்தை இந்த குழு அடைந்தது. யுத்தகாலப்பகுதியில்  இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி (Long Range Reconnaissance Patrol -LRRP) தளபதியான லெப்.கேணல் லலித் ஜெயசிங்கவின் ஆளஊடுருவும் படையணியின் தாக்குதலில் தமிழ் மாணவர்கள் கொக்காவில் பகுதியில் வைத்து  

படுகொலை செய்யப்பட்டனர்.  இன்றும் மண்ணாலான ஒரு தூபி இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.