யாழ்.போதான வைத்தியசாலைக்குள் இதுதான் நடக்கிறது..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதான வைத்தியசாலைக்குள் இதுதான் நடக்கிறது..

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் தினசாி மனிதாபிமானமற்ற பல செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண் டே இருக்கின்றது. இது குறித்த தகவல்கள் எவையும் பொியளவில் வெளியாவதில்லை. 

அப்படியே வெளியே வந்தாலும் அவா்களுக்குள்ள நன்மதிப்பை அல்லது சேவையை முன்னிறுத்தி மற்றவா்களி ன் வாயை மூடுவதில் வைத்தியசாலை நிா்வாகம் தவறியதில்லை. 

இவ்வாறான நிலையில் விபத்தில் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றி ருந்த ஒருவா் இறுதியில் காயத்திற்கு மருந்து கட்டாமலேயே திரும்பி சென்றிருக்கின்றாா். 

அதனை காயமடைந்தவருடன் சென்ற இளைஞா் ஒருவா் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளாா். துணிச்ச லான அந்த இளைஞனின் செயற்பாட்டினால் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள்

நடந்தேறிய ஒரு சம்பவமாவது வெளியே வந்துள்ளது. அந்த இளைஞனின் முகப்புத்தக பதிவை இங்கே அப்படி யே தருகிறோம். 

விபத்திற்குள்ளான ஒருவருக்கு மருந்து கட்டுவதற்காக யாழ்ப்பாண  வைத்தியசாலைக்கு 9.15 pm இற்கு சென்றேன்
1: Warde இல் தான் நிக்கவேண்டும் அவசரமானால் private hospital போம் என்றார் doctor
அவ்வளவு பண வசதி எம்மிடம் இல்லை நேரம் ஆனாலும் பரவாயில்லை என்றதற்கு warde admission போடுவதற்கான துண்டை தந்தார்.....அவர்

2: 24 (விபத்து பிரிவு) warde ஐ தேடி பிடித்து இ அங்கும் பதிவுகளை மேற்கொண்டு விட்டு
2 மணி நேரம் காத்திருந்து பொறுமை எல்லை கடந்து வைத்திய சாலையை விட்டு வெளியேறி

3 இறுதி முயற்சியாக கைடயில் ஓரு tea ஐ குடித்துவிட்டு பிரதான நுழைவாயிலால் சென்றால் தூரம் அதிகம் என்பதால் warde இற்கு அருகில் உள்ள நுழைவாயிலால் சொல்ல முற்பட்ட வேளை காவலர் தடுத்தார் (இப்பாதை வைத்தியர் உபயோகத்திற்கு மட்டும் என்றார்.

நடக்க முடியாமல் உள்ளார் காயப்பட்டவைர மட்டுமாவது விடுங்கள் என்றேன் முடியாது என்றார்) தடுக்கப்பட்டு மீண்டும் பிரதான நுழைவாயில் ஊடாக நீண்ட தூரம் நடந்து சென்று 12.45 am இற்கு வெற்றிகரமாக வேலைகளை முடித்துக் கொண்டேன். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு