SuperTopAds

14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் திட்டத்தை ஆளுநா் நிறுத்தவேண்டும், முன்னாள் எதிா்க்கட்சி தலைவா் காட்டம்..

ஆசிரியர் - Editor I
14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் திட்டத்தை ஆளுநா் நிறுத்தவேண்டும், முன்னாள் எதிா்க்கட்சி தலைவா் காட்டம்..

வடக்கில் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத் திட்டத்தினை வடமாகாண ஆளுநா் நிறுத்தவேண்டும். என முன்னாள் வடமாகாணசபை எதிா்க்கட்சி தலைவா் சி.தவராசா கூறியுள்ளாா். 

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணத்தில் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் ஆக மாற்றுவதற்கு  ஆளுநர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவர்  பெரும் முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன.

13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் கிடைத்த அதிகாரப் பகிர்வின் விளைவுதான் மாகாணசபை.  எனவே தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த விடயத்தினை கருத்தில் கொண்டு 

வடக்கு மாகாண ஆளுநரால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு உரிய பணிகளை முன்னெடுக்க வேண்டும்” என்று சி.தவராசா கேட்டுக்கொண்டார்.

“தேர்தல் காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமக்கு அரசியல் தீர்வுதான் வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு 

தற்போது அரசின் வரவு செலவுத் திட்டத்தினை தாங்கள் வரவேற்பதாகவும் கூறுவது வியப்பாகவுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.