வடமாகாண மக்களுக்கு சுகாதார அமைச்சு அவசர எச்சாிக்கை..! எலிக்காய்ச்சல் தீவிரமடைகிறதாம் வடக்கில்.
மன்னாா் மாவட்டம் தவிா்ந்த வடக்கின் 4 மாவட்டங்களில் எலிக்காச்சல் பரவும் அபாயம் உள்ளதாக எச்சாிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஆண்டின் 3 மாதங்களில் வவுனியாவில் 26 பேர் பாதிப்பு என்று சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ள து. எலிகள் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலமாகவே
லேப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் நோய் பரவுகிறது. இலங்கையில் ஏனைய மாவட்டங்களில் இந்த நோயின் தாக்கம் பரவலாகக் காப்பட்டாலும் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில்
சற்றுக் குறைவானதாகவே காணப்படுகிறது. இலங்கையில் கடந்த ஆண்டு இரத்தினபுரி மாவடத்திலேயே எலிக்காய்ச்சல் ஏற்பட்ட அதிக நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.