அரச காணிக்கு கள்ள உறுதி முடித்து மணல் அகழ முயற்சி, அரசியல் கட்சி ஒன்றின் முக்கிஸ்த்தரை அடித்து துரத்திய வடமராட்சி கிழக்கு மக்கள்..
வடமராட்சி கிழக்கு குடத்தனை- பொற்பதி பகுதியில் அரச காணிக்கு போலி உறுதி முடித்து மணல் அகழ்வுக்கு முயற்சித்தவா்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து துரத்தியடித்துள்ளனா்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஒருவர் இந்த விடயத்தில் தலையிட்டு அவர்களை விடுவித்துள்ளார். இந் தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
வெளிப்படுத்தல் உறுதி மூலம் 10 ஏக்கர் நிலத்தை பொற்பதிப் பிரதேசத்தில் ஒருவர் உரிமை கோரியுள்ளார். அந்த உறுதி பதிவுக்காக பதிவாளர் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டபோது,
வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்துக்கு விவரங்கள் கோரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதேச செய லகம் அது அரச காணி என்று பதில் வழங்கியுள்ளது.
இருப்பினும் அந்தப் பகுதியில் மணல் அகழ்வுக்கான முயற்சி கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பிர தேச மக்கள் தடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
வெளிப்படுத்தல் உறுதியை முடிக்க முயன்ற நபர், வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்திய முன் னாள் அமைச்சரின் அரசியல் கட்சியைச் சேர்ந்தோரின் உதவியுடன் நேற்றுச் சனிக்கிழமை
அங்கு சென்றுள்ளார். காணியில் அளவீட்டுப் பணிகளை ஜி.பி.எஸ். கருவியின் உதவியுடன் முன்னெடுத்துள்ள னர். மக்களுக்கு இந்தத் தகவல் கிடைக்கப் பெற்றதும்,
அந்தப் பகுதியில் திரண்டனர். காணி அளவீட்டுப் பணியில் ஈடுபட்டவர்களை, அவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தக் கோரியுள்ளனர்.
தாங்கள் அதிகாரிகள் என்று கூறியபோதும், அடையாள அட்டையையோ ஆவணங்களையோ காண்பிக்க வில்லை. சந்தேகமடைந்த மக்கள் அவர்களின் அளவீட்டுக் கருவிகளைப் பிடுங்கி எறிந்துள்ளனர்.
அவர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது அதிகாரிகள் என்று கூறியோர் ஓட்டம் பிடித்துள்ளனர். அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகளும் தப்பிச் சென்றுள்ளனர்.
இருப்பினும் மக்களால் இருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்பில் கிராம அலுவலருக்கு தகவல் வழங்கப்பட்டது.
கிராம அலுவலரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்ததாக மக்கள் தெரிவித்தனர். இதன்போது முன்னாள் அமைச்சர் அலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு, ம
க்கள் பிடித்து வைத்துள்ள இருவரையும் விடுவிக்குமாறு கூறியுள்ளார். இதன் பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களுடனும் அலைபேசியில் உரையாடியுள்ளார்.
மக்களால் பிடிக்கப்பட்ட இருவரும் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இடம்பெற்றமையை அரச அதிகாரிகள் உதயனுக்க உறுதிப்படுத்தியபோதும்,
தமது பெயர் விவரங்களை அவர் வெளியிட விரும்ப வில்லை.