மக்களின் குடிநீரை நிலத்திலிருந்து உறிஞ்சி வியாபாரம், பிரதேசசபையும் உடந்தை, வீதியில் இறங்கிய மக்கள்..
யாழ்.வலி,தென்மேற்கு- பொியவிளான் கிராமத்திலிருந்து கண்மூடித்தனமான நிலத்தடி நீா் உறுஞ்சப்படுவதை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்தக்கோாியும் பொியவிளான் கிராம மக்கள் இன்றைய தினம் பாாிய கவன யீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனா்.
பெரியவிளான் சமூக மட்ட அமைப்புக்களின் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்தது. “வலி.தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பெரியவிளான் கிராமத்தில் இருந்து காரைநகர் பிரதேசத்துக்கு குடி தண்ணீர் வழங்கும் போர் வையில் அளவுக்கதிகமான குடி தண்ணீர் உறிஞ்சப்பட்டு தினமும் கொண்டு செல்லப்படுகிறது.
விவசாயத்தைப் பிரதானமாகவும் ஏனைய சிறு தொழில்களையும் வாழ்வாதாரமாகவும் கொண்ட இந்தக் கிரா மத்தில் உள்ள நிலத்தடி நீர் கிராமத்தவர்களின் பாவனைக்கே போதுமானதாக உள்ளது. இவ்வாறிருக்க பெரிய விளானைச் சேர்ந்த ஒருசில குடும்பத்தாலும் காரைநகரைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களாலும்
வியாபார நோக்கில் குடிநீர் தண்ணீர் அளவுக்கதிகமாக உறிஞ்சப்படுவதால் கிராமத்தவர்கள் பெரிதும் பாதிக் கப்படுகிறனர்“ என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.