வல்வெட்டித்துறை நகரசபையின் பொறுப்பற்ற செயற்பாடு, நகரசபையை முற்றுகையிட மக்கள் தீா்மானம்..
யாழ்.வல்வெட்டித்துறை நகரசபையின் பொறுப்பற்ற செயற்பாட்டினை கண்டித்து போராட்டம் நடாத்துவதற்கு தொண்டமனாறு கிராம மக்கள் தீா்மானித்துள்ளனா்.
தொண்டைமானாறு கரும்பாவெளியில் வல்வெட்டித்துறை நகரசபையினர் குப்பை கொட்டுகின்றனர். அதனா ல் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் போராடும் முடிவுக்குத் தள்ளப்பட்டோம்
என்று அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். அங்கு பல மாதங்களாகக் குப்பை கொட்டப்படுகின் றது. அவை தீவைக்கப்பட்டு எரியூட்டப்படுவதால் குடியிருப்புகளுக்குள்
புகை சூழ்ந்து சிரமங்களை ஏற்படுத்துகிறது. அங்கிருந்து குப்பைகளை அகற்றுமாறு கோரி மக்கள் வல்வெட் டித்துறை நகரசபை, உள்ளூராட்சித் திணைக்களம் மற்றும்
சுற்றுச் சூழலுடன் தொடர்புபட்ட திணைக்களங்களுக்கும் கடிதங்களை அனுப்பியிருந்தனர்.
மாற்று ஏற்பாடு
மக்களுடைய கோரிக்கைக்கு செவிசாய்த்த அதிகாரிகள், வல்வெட்டித்துறை முள்ளிப் பகுதியில் திண்மக்கழி வகற்றல் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
பின்னர் குப்பைகள் இங்கிருந்து அகற்றப்படும் என்று உத்தரவாதம் வழங்கியிருந்தனர். குப்பை கொட்டுவ தற்கு ஏற்ற இடவசதிகள் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இல்லாததால் அங்கு குப்பைகள்
கொட்டப்படுகின்ற என்று நகரசபையினர் தெரிவித்திருந்தனர். குப்பை கொட்டுங்கள் ஆனால் எரியூட்டாதீர் கள் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்தி ருந்தனர்.
தொடர்கிறது தீ வைப்பு
மக்களுடைய வேண்டுகோளை மீறி தீ வைக்கப்படுவது தொடர்கின்றது. நகர சபையோ தாங்கள் தீ வைக்க வில்லை என்று கூறுகின்றது.
குப்பை எரிகின்றபோது அணைக்க நகர சபையே வரும். இந்த நிலை தொடர்கிறது. பிளாஸ்ரிக் கழிவுகள், பொலித்தீன் கழிவுகள் அனைத்தும் எரிக்கின்றன.
மக்கள் கடும் விசனம்
தீயால் எழும் புகை காற்றின் திசைகளுக்கு ஏற்றவாறு குடியிருப்புக்களுக்குள் செல்கின்றது. கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இலையான்கள் தொல்லை, சுகாதாரச் சீர்கேடு, சிறுவர்களுக்கு நோய்தொற்றும் அபாயம் என்று மக்கள் குறைகளை அடுக்கிக் கொண்டே செல்கின்றனர். நகரசசபையினரே தீவைத்து
விட்டு எமக்கு மறுப்புக் கூறுகின்றனர்.
மூலிகைகள் நாசம்
தீ அந்தப் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வகையான மூலிகைச் செடிகள் அழிந்துள்ளன என்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர் புஸ்பரட்ணம் உட்பட்ட ஆய்வாளர்களால் மேற்கொண்ட ஆய்வுகளின்போது தெரிவிக்கப்பட்டது.
நன்னீர் ஏரியில் குப்பை
குப்பைகளை நாய்கள், காகங்கள் இழுத்துச் சென்று நன்னீர் ஏரிகளில் விடுகின்றன. பொலித்தீன் பைகள் காற் றில் பறந்து நன்னீர் ஏரியில் விழுகின்றன.
நன்னீர் ஏரி மாசுபடுகிறது. நிலத்தடி நீரைப் பாதுகாக்க நீரைச் சேமிக்க அமைக்கப்பட்ட நன்னீர் ஏரி தற்போது மாசடைந்துள்ளது.
வெளிநாட்டுப் பறைவகள் இந்த நன்னீர் ஏரிக்கு விரும்பி வருகின்றன. இந்த நீரை அருந்தி அவை இறக்கும் நிலை காணப்படுகிறது.
போராட முடிவு
இந்த நிலையிலேயே சலிப்படைந்த மக்கள் நகரசபையை எதிர்த்துப் போராட முடிவு செய்துள்ளனர். குப்பை களை அங்கிருந்து அகற்றும் வகையில் போராட்டம் அமையவுள்ளது என்று மக்கள் தெரிவித்தனர்.
நகரசபையின் சிறப்பு அமர்வு ஒன்றின் போது குறித்த பகுதியில் பாதுகாப்பு அலுவலர் ஒருவரைக் கடமையில் அமர்த்தி குப்பை கொட்டும் முறைகளைக் கண்காணிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் நடைறைக்கு வரவில்லை.
தவிசாளர் பதில்
குப்பைகளைத் தரம் பிரித்தே எடுக்கின்றோம். நகரசபைக்குட்பட்ட குப்பைகளை 20 லோட், 30 லோட் என்று வெளியிடங்களுக்கு அனுப்புகிறோம்.
கடந்த ஒரிரு மாதங்களாகவே இவ்வாறு அதிகமாக எரியூட்டப்படுகிறது. நகரசபை தீவைக்கவில்லை. மக்களு டைய குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளமுடியாது.
அந்தப் பகுதியைக் கண்காணிக்கின்றோம். நாளை(இன்று) தொடக்கம் காவலாளி ஒருவர் அங்கு அமர்த்தப் பட்டு குப்பைகளைக் கண்காணிப்பார் என்று நகரசபையின் தவிசாளர் கோ. கருனானந்தராசா தெரிவித்தார்.