“தவளையும் தன் வாயால் கெடும்..” சுரேன் ராகவனுக்கும் இது பொருந்துமா..?

காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடா்பான தகவல்கள் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவால் வெளியிடப் படும் என வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் ஜெனீவாவில் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிரு க்கின்றாா்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் மனிதாபிமான நாகரிக பிரச்சினை. இதிலிருந்து ஒருபோதும் நகர்ந்து செல்ல முடியாது என்று அரச தலைவருக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் தேவைகளுக்கு செவிமடுக்க வேண்டியது அவசியமாகும்.
ஐந்து மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகங்களை நிறுவுவது அவசியமாகும் என்றார் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்.