இராணுவம் செய்யும் அடாவடி..! தட்டிக்கேட்க மாட்டீா்களா? நாவற்குளம் மக்கள் அரச அதிகாாிகளிடம் கேள்வி.
மன்னாா்- திருக்கேதீஸ்வரம் நாவற்குளம் பகுதியில் சில வருடங்களுக்கு முன்னா் இரா ணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்களுக்கு சொந்தமான காணியில் தொ டா்ந்தும் இராணுவத்தினா் தமது கழிவு பொருட்களை கொட்டி வருகின்றனா்.
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் நாவற்குளத்திற்குச் செல்லும் பிரதான சந்தியில் உள்ள தனியாரின் காணியில் பல வருடங்களாக இராணுவத்தினர் முகாமிட்டு இருந்த நிலையில்,
குறித்த தனியாரின் காணிகயில் இருந்து இராணுவத்தினர் சில வருடங்களுக்கு முன் முற்றாக வெளியேறியுள்ளனர். எனினும் குறித்த காணி உள்ள இடம் சார்ந்த பகுதிக ளில் தொடர்ச்சியாக சட்ட விரோத மண் அகழ்வுகளும் இடம்பெற்று
வந்துள்ளதுடன் குறித்த காணியில் அப்பகுதியில் உள்ள இராணுவ முகாம் மற்றும் இராணுவ கவாலரண்களில் உள்ள இராணுவத்திற்குச் சொந்தமான முழு கழிவுப் பொருட்களும் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு
எரியூட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இராணுவத்தினர் பயண் படுத்திய உடைகள், தொப்பி, குறிப்பேடுகள், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொட்டப்படுவதாக
அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.