கண்ணிவெடி அகற்றப்படாத பகுதிகளுக்குள் சா்வ சாதாரணமாக நுழையும் ஆசாமிகள் யாா்? பொலிஸ் பாதுகாப்புக்கு விண்ணப்பம்.

ஆசிரியர் - Editor I
கண்ணிவெடி அகற்றப்படாத பகுதிகளுக்குள் சா்வ சாதாரணமாக நுழையும் ஆசாமிகள் யாா்? பொலிஸ் பாதுகாப்புக்கு விண்ணப்பம்.

யாழ்ப்பாணம்- கிளிநொச்சி இடையிலான முகமாலை பகுதியில் போா் காலத்தில் வி தைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவதில் பாாிய சவால்கள் காணப்படுவதாக தன்னாா்வ கண்ணிவெடியகற்றும் நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது குறித்து அந்த நிறுவனங்கள் மேலும் கூறியுள்ளதாவது, இந்த பகுதிகளில் வெடி பொருட்கள் பெரும் சவால்களாக காணப்படுகின்றன. இதனைவிட இப்பகுதிகளில் இன்னமும் வெடிபொருட்கள் அகற்றப்படாத 

மிகவும் ஆபத்தான பகுதிகளில் கைவிடப்பட்ட காவலரண்களில் உள்ள மரக்குற்றிகள் இரும்புகள் என்பவற்றை பலர் எடுத்து வருகின்றனர். இதேவேளை கண்ணவெடி அக ற்றும் பணிகள் முன்னெடுக்கும் பகுதிகளில் வெடிபொருள் 

ஆபத்துக்களுக்கு இடும் பதாதைகள் குறியீடுகள் என்பவற்றையும் சேதப்படுத்தியும் அவற்றை எடுத்தும் செல்கின்றனர். இதனால் மறுநாள் பணிகளை முன்னெடுப்பதற்கு முன்னர் அதனை சீர் செய்வதற்கு பணியாளர்கள் 

சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். வெடிபொருள் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட பகுதிகள்  தவிர்ந்த ஏனைய ஆபத்தான பகுதிகளுக்கு பொலிசாரின் பாதுகாப்பு போடப்படவேண்டும் என்ற அவசியத்தை 

பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு