SuperTopAds

மன்னாா் மாவட்டத்தில் மட்டும் 72 ஆயிரம் ஏக்கா் நிலத்தை விழுங்கிய அரசு. சுட்டிக்காட்டியும் சுரணை இல்லை..

ஆசிரியர் - Editor I
மன்னாா் மாவட்டத்தில் மட்டும் 72 ஆயிரம் ஏக்கா் நிலத்தை விழுங்கிய அரசு. சுட்டிக்காட்டியும் சுரணை இல்லை..

காணி அமைச்சின் தலையீட்டுடன் மன்னாா் மாவட்டத்தில் 72 ஆயிரம் ஏக்கா் நிலத்தி னை அரசு ஆக்கிரமித்துள்ளதாகவும், இந்த நிலம் தமிழ் மக்களுக்கு சொந்தமான நில ம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினா் சாள்ஸ் நிா்மலநாதன் கூறியுள்ளாா். 

அத்துடன் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு மன்னாரில் பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் வழங்க அரசாங்கம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் காணி  மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு, தொழில் தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, 

தொலைத்தொடர்புகள் ,வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு  மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.