SuperTopAds

லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு ஜனாதிபதி தீவிரம், தேசிய நிகழ்ச்சி திட்டத்தை இன்று அங்குராா்ப்பணம் செய்கிறாா்..

ஆசிரியர் - Editor I
லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு ஜனாதிபதி தீவிரம், தேசிய நிகழ்ச்சி திட்டத்தை இன்று அங்குராா்ப்பணம் செய்கிறாா்..

இலங்கையில் லஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான 5 ஆண்டு நிகழ்ச்சி திட்டம் இன்று ஜனாதிபதி தலமையில் அங்குராா்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக இந்த திட்டம் அங்குரார்ப் பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியை உள்ளடக்கியதா க இந்தத் திட்டம் அமையவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பின ர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்தோடு நாடு முழுவதிலிருந்தும் சுமார் 1250 பேர் அழைக்கப்படவுள்ளனர் என அர சாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டுத் திட்டம் மற்றும் 4 கையேடுகளும் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டு 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.அதன்படி, 15 புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.