இ.போ.ச- தனியாா் இடையில் முறுகல், வவுனியா சாலை முடங்கியது. வீதிகளில் நிற்கும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
இ.போ.ச- தனியாா் இடையில் முறுகல், வவுனியா சாலை முடங்கியது. வீதிகளில் நிற்கும் மக்கள்..

தனியாா் பேருந்து ஊழியா்களுடன் உருவான தா்க்கத்தை தொடா்ந்து இ.போ.சபையி ன் வவுனியா சாலை ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 

இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிா்கொண்டுவருகின்றனா். வவுனியா இ.போ.ச. பேருந்துகள் அனைத்தும் வவுனியா சாலையில் இன்று (திங்கட் கிழமை) காலை முதல் தரித்துவைக்கப்பட்டுள்ளது. 

வவுனியா இ.போ.ச.வினருக்கும் த னியாருக்கும் இடையே இணைந்த நேர அட்டவனை மற்றும் இணைந்த சேவை தொடர்பாக பிரச்சினைகள் நிலவி வந்துள்ளன. 

இந்த விடயம் தொடர்பாக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று, தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.எனினும் நீதிமன்றத்தின் கட்டளையை புறக்கனித்து அதனை எதிர்க்கும் முகமாக தனியாரும் ஒரு சில பொலிஸாரும் 

ஈடுபட்டமையினாலேயே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்ததாக பேருந்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அரச ஊழியர்கள், பாடசாலை செல்லும் மாணவர்கள், 

பொதுமக்க ள் என பலரும் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளாகியுள்ளனர். இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கான தனியார் பேருந்து ஊழியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

வவுனியா பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட முறண்பாட்டினை அடுத்து இன்று முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கிளிநொச்சி தனியார் போக்குவரத்து சங்க தலைவர் நகுலன் தெரிவித்துள்ளார். 

ஏ னைய மாவட்டங்களைப் போன்று குறுந்தூர சேவை அடிப்படையில் சேவைகளை அங்கிருந்து முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு