வடக்கில் 14 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயா்த்தப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
வடக்கில் 14 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயா்த்தப்படுகிறது..

வடமாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த் துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தீர்மானித்துள்ளார்.

வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதி நிதிகள் தமது பாடசாலைகளை  தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான அ னுமதியினை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை 

அண்மைக்காலமாக ஆளுநரிடம் முன்வைத்து வருகின்ற நிலையிலேயே ஆளுநர் மேற் குறிப்பிட்ட தீர்மானத்தினை எடுத்துள்ளார். ஏனைய எட்டு மாகாணங்களுடன் ஒப்பிடு ம்போது வடமாகாணத்தின் தேசிய பாடசாலைகள் 2 சதவீதமாக காணப்படும் 

அதேவேளை ஏனைய மாகாணங்களின் தேசிய பாடசாலைகள் 3.5 சதவீதமாக  காண ப்படுவதனால், வடமாகாணத்தின் தேசிய பாடசாலைகளையும் சராசரியா க 3.5 சதவீ தமாக கொண்டுவரும் நோக்கில் 

14 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கு கௌரவ ஆளுநர்  நடவடிக்கை மேற் கொண் டுள்ளார். அத்துடன் குறித்த 14 பாடசாலைகளும் மாகாணத்தின் ஐந்து மாவட்டங்க ளையும் கட்டாயம் பிரதிநிதித்துவம் செய்யவேண்டுமென்றும் 

அவற்றை தெரிவு செய்து அனுப்பும் பொறுப்பு அந்தந்த மாவட்டங்களின் மக்கள் பிரதி நிதிகளுக்கே உள்ளதெனவும், அவர்கள் கூடியவிரைவில் பாடசாலைகளை தெரிவு செய்து ஆளுநருக்கு அனுப்பி வைக்குமாறு 

ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு