300 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய சந்தையாக மாறுகிறது சுன்னாகம் சந்தை..

ஆசிரியர் - Editor I
300 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய சந்தையாக மாறுகிறது சுன்னாகம் சந்தை..

யாழ்.சுன்னாகம் பொது சந்தையை நவீன வசதிகளுடன் கூடிய சந்தையாக மாற்றிய மைத்து கட்டுவதற்கு சுமாா் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கி ன்றது. 

பெருநகர அபிவிருத்தி அமைச்சினூடாக இந்த ஆண்டு  200 மில்லியன் ரூபாவும் அடுத் த ஆண்டுக்கு 100 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டு அதற்கான அனுமதி வழங்கப்பட் டுள்ளது.

இது தொடர்பில் வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளரால் அனுப்பிவைக்கப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சுன்னாகம் பொதுச் சந்தையின் நவீன வசதிகளுடனான கட்டடத் தொகுதியை அமை க்கும் ஆரம்ப பணிகள் மற்றும் அந்த திட்டத்தினை விரைவுபடுத்துவதற்காக பிரதேச சபைத் தலைவர் க.தர்சனின் அழைப்பின் பேரில் 

அமைச்சர் மனோ கணேசன் இன்று காலை சுன்னாகம் சந்தைக்கு வருகை தந்தார். அவர் சந்தையின் கட்டமைப்பு தொடர்பாக வியாபாரிகள் மற்றும் பொது மக்களோடு கலந்துரையாடினார்.

இதன்போது சுன்னாகம் சந்தையினுடைய பெருமையினை வெளிப்படுத்துகின்ற பாரம்பரிய கட்டடத்தில் மாற்றம் ஏற்படாத வகையில் நவீன சந்தைத் தொகுதி அமைக்கப்பட வேண்டும் என 

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனால் சுட்டிக்காட்டப்பட்டது. இவற் றை கவனத்தில் எடுத்த அமைச்சர் பெருநகர அபிவிருத்தி அமைச்சருக்கு இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டு இலங்கையின் 

சிறந்த சந்தைத் தொகுதியாக சுன்னாகம் சந்தையினை மாற்றுகின்ற பணி விரைவு படுத்தப்படும் என தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு