பருத்துறை- திக்கம் பகுதியில் அதிரடி, 1 கோடியே 30 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு, இருவா் கைது..

ஆசிரியர் - Editor I
பருத்துறை- திக்கம் பகுதியில் அதிரடி, 1 கோடியே 30 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு, இருவா் கைது..

யாழ்.பருத்துறை திக்கம் பகுதியில் சுமாா் 1 கோடியே 30 லட்சம் பெறுமதியான 88 கி லோ 76 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தொிவி த்துள்ள பொலிஸாா், குறித்த கஞ்சாவை கடத்தியவந்த இருவரை கைது செய்துள்ளதாகவும், அவா்கள் திக் கம் பகுதியை சோ்ந்தவா்கள் எனவும் தொிவித்துள்ளனா். 

போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் கடற்படையினரும் முன்னெடுத்த நடவடிக் கையிலேயே இந்த கேரள கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றும் பொ லிஸார் தெரிவித்தனர். கொழும்பு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்க ப்பட்ட தகவலின் அடிப்படையில் 

போதைப் பொருள் தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடற்படையினரும் இ ணைந்து பருத்தித்துறை திக்கம் பகுதியில் கடத்தலுக்கு தயாராகவிருந்து நிலையில் 88 கிலோ 76 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொதிகளைக் கைப்பற்றினர்.

அதன்பெறுமதி ஒரு கோடியே 33 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனைக் கடத்த முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், சான்றுப் பொருளு ம் கையளிக்கப்பட்டது" என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு