மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்காக காணியை சுவீகாிக்க எதிா்ப்பு.. பொலிஸாருக்கு காணி வழங்கமாட்டோம் மக்கள் உறுதி.
யாழ்.மானிப்பாய் பொலிஸ் நிலைய கட்டிடம் அமைப்பதற்காக பொதுமக்களின் கா ணிகளை சுவீகாிக்க பொலிஸாரால் அனுப்பபட்டுள்ள கடிதத்திற்கு காணி உாிமை யாளா்கள் கடுமையான எதிா்ப்பை தொிவித்து பிரதேச செயலருக்கு கடிதம் எழுதியு ள்ளனா்.
தனியாருக்குச் சொந்தமான 16 பரப்புடைய 6 காணிகளைச் சுவீகரிப்பதற் கான அறி வித்தல் காணி உரிமையாளர்களுக்குப் பிரதேச செயலகம் ஊடாக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சூழ தமிழ் மக்களின் நிரந்தர உறு திக் காணிகளை நீண்டகாலமாகக் கையகப்படுத்தி வைத்துள்ள
பொலிஸார் அந்தக் காணிகளைத் தமது பயன்பாட்டுக்கு நிரந்தரமாக கையகப்படுத் துவதற்கு காணி சுவீகரிப்புச் சட்டத்தைப் பயன்படுத்தும் முதலாவது அறிவித்தலை யே நில உரிமையாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு வழங்கப்பட்ட அறி வித்தலின் பிரகாரம் காணி உரிமையாளர்கள்
தமது காணிகளை வழங்குவதற்கு எந்தவிதமான இணக்கமோ அல்லது வழங்குவதற் குச் சம்மதமோ கிடையாது என்று பிரதேச செயலருக்கு எழுத்தில் வழங்கியுள்ள னர். குறித்த நிலத்தை, அவற்றின் உரிமையாளர்களின் சம்மதம் இன்றி அடாத்தாக அபகரித்து வைத்திருக்கும் நிலையிலேயே பொலிஸ் நிலையம் இயங்குகிறது.
அந்த நிலத்தை வழங்குமாறு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் இவ்வாறு சுவீகரித்துள்ள நிலங்களில் பொலிஸ் நிலையம் மட்டுமன்றி பொலிஸாரின் அணிவகுப்புக் கூடம், தங்கு விடுதிகள் என பல ஆடம்பர வசதிகளும் உள்ளடக்கப்படவுள்ளன என்றும் நில உரிமையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.