மண்கும்பான்- சாட்டி கடலில் மூழ்கிய குடும்பஸ்த்தா், கடற்படையின் முயற்சியால் குற்றுயிராய் மீட்கப்பட்டாா்..

ஆசிரியர் - Editor I
மண்கும்பான்- சாட்டி கடலில் மூழ்கிய குடும்பஸ்த்தா், கடற்படையின் முயற்சியால் குற்றுயிராய் மீட்கப்பட்டாா்..

யாழ்.மண்கும்பன் - சாட்டி வெள்ளைக் கடற்கரையில் நீராட சென்ற குடும்பஸ்த்தரை நீரோட்டம் இழுத்து சென்ற நிலையில், கடற்படையின் முயற்சியினால் அவா் மீட்கப் பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடா்பாக மேலும் தொி யவருவதாவது, யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவரே இவ் வாறு கடலில் மூழ்கி மீட்கப்பட்டார்.

குருநகரைச் சேர்ந்தவர்கள் சிலர் இணைந்து சாட்டி கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் கடலில் குளித்த வேளை குடும்பத்தலைவர் ஒருவர் காணாமற்போயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதுதொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து கடற்ப டையினரின் படகில் குடும்பத்தலைவரை இழுத்துவந்தனர். கரையில் அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது. அவருக்கு சுவாசம் வருவதையறிந்தனர்.

அதனால் குடும்பத்தலைவர் அம்புலன்ஸில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு