மதத்தின் பெயரால் காட்டுமிராண்டித்தனம் புாிந்தவா்களை கைது செய்யாதது ஏன்..?

ஆசிரியர் - Editor
மதத்தின் பெயரால் காட்டுமிராண்டித்தனம் புாிந்தவா்களை கைது செய்யாதது ஏன்..?

மன்னாா்- திருககேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவை உடைத்து வீழ்த்திய வா்களை காணொளிகள், புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு கைது செய்யும் படி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இதுவரை பொலிஸாா் நடைமுறைப்படுத்தா மைக்கான காரணம் என்ன?

மேற்கண்டவாறு அகில இலங்கை இந்து மாமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எந்­த­ வொ ரு­ த­னி­ந­ப­ரி­ன­தும் அல்­லது மத அமைப்­பி­ன­தும் வழி­காட்­ட­லில், சட்­ட­வி­ரோ­த­மாக, அட்­ டூ­ழி­யம் புரிந்­த­வர்­களை இது­வரை கைது­செய்­யாமை 

இந்த நாட்­டின் சட்­டத்­தை­யும் நீதிப் பரி­பா­ல­னத்­தை­யும் நிந்­தித்து, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ ளுக்­குச் செய்­யும் அநீ­தி­யு­மா­கும் என்­ப­தைச் சுட்­டிக் ­காட்ட விளை­கின்­றோம். இந்­தத் துன்­பி­யல் சம்­ப­வம் தொடர்­பில் இரண்டு மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த

மத­கு­ரு­மார்­கள் வெவ்­வேறு வித­மான அறிக்­கை­களை விடுத்­துள்­ள­னர். மன்­னார் மா வட்ட கத்தோலிக்க மத­குரு விடுத்­துள்ள அறிக்கை இந்­தச் சம்­ப­வத்தை நியா­யப் ­ப­டுத்­ துவது போல­வும், முற்­று­மு­ழு­தாக சம்­ப­வத்­தைத் திரிப்­ப­தா­க­வும் அமைந்­துள்­ளது.

மக்­க­ளைத் திசை திருப்­பும் செயல்­க­ளைக் கைவிட்டு, நாட்­டில் அனைத்து மதங்­க­ளும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தைப் பற்­றிப் பேசிக்­கொண்டே பின்­பு­லத்­தில் தமது செயற்­பா­டு­கள் மூலம் இந்த நாட்­டில் குழப்­பங்­க­ளையும் 

பிணக்­கு­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தும் பாம்­பின் நாக்­குப்­போன்ற இரட்­டை­நி­லைப்­பாட்­டை­ யும் விட்­டு­வி­ட­ வேண்­டும் என­வும் மீண்­டும் கேட்­டுக் கொள்­ளு­கின்­றோம். சிவ­ராத்­தி­ ரிக்கு முதல்­நாள் ஆயத்­தப் பணி­க­ளின்­போது, 

நீண்­ட­கா­ல­மாக மாந்தை வீதி­யின் முகப்­பில் அமைக்­கப்­பட்­டி­ருந்த திருக்­கே­தீச்­சர ஆலய வீதி அலங்­கார வளை­வைச் சீர்­செய்­யும் நோக்­கில் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­ கைக்கு இடை­யூ­று­செய்து, அந்த வளை­வைப் பிடுங்­கி­யெ­றிந்து 

அட்­டூ­ழி யம் செய்த கத்தோலிக்க மதத்­த­வர்­க­ளின் செயல் தொடர்­பில் அகில இலங் கை இந்­து­மா­மன்­றம் மீண்­டும் தனது வன்­மை­யான கண்­ட­னங்­க­ளைத் தெரி­வித்­துக் கொள்­கி­றது என்று அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Radio
×