காற்றில் பறந்த ஜனாதிபதியின் வாக்குறுதி, ஜனாதிபதியின் அசமந்தம் குறித்து சிறீதரன் சீற்றம்..
பரந்தன் இரசாயன தொழிற்சாலை என்ற பெயாில் கொழும்பில் இயங்கிக் கொண்டி ருக்கும் தொழிற்சாலையை பரந்தனுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க ப்படும். என ஜனாதிபதி கூறி 3 மாதங்கள் கடந்துள்ளபோதும் வாக்குறுதி நிறைவேற் றப்படவில்லை.
2018 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 17 ஆம் திகதி அரச தலைவரின் வடகிழக்குக் கான அபிவிருத்திச் செயலணிக் கூட்டம் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரச தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வடக்கில் இயங்கிய பெரும் தொழிற்சாலைகளில் ஒன்றான
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை நாட்டில் தற்போது இயங்குகின்றதா? இல் லையா? என்பதனை உரிய அமைச்சின் அதிகாரிகள் தெரியப்படுத்த வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் அரச தலைவரிடம் கோரப்பட்டது. உரிய அமைச்சின் அதி காரிகள் அது தொடர்பில் விளக்க வேண்டும் என்று அரச தலைவர் தெரிவித்திருந்தார்.
பரந்தனில் இரசாயன தொழிற் சாலைக்கு 120 ஏக்கர் நிலம் உள்ளது. போரால் அழிவ டைதுள்ள அந்தத் தொழிற்சாலை சீரமைக்கப்பட்டு இயங்க வைக்கப்படும் என்று அதி காரிகள் தெரிவித்தனர். அந்தத் தொழில்சாலையின் பெயரில் கொழும்பில் தொழிற் சாலை ஒன்று இயங்குகின்றது.
அந்தத் தொழிற்சாலையின் பெயரில் பல வாகனங்கள் திரிகின்றன. பரந்தன் இரசா யனத் தொழிற்சாலையில் பணியாற்றிய பலர் தற்போதும் தொழில் இல்லாதிருக்கின் றனர். ஆனால் அந்தத் தொழிற்சாலையின் பெயரில் இப்போது கொழும்பில் பலர் பணியாற்றுகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்
சுட்டிக்காட்டியிருந்தார். அரச தலைவர் மைத்திரிபால இந்த விடயங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, அதிகாரிகள் ஆம் எனப் பதிலளித்திருந்தனர். அப் போது நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அந்தத் தொழிற்சாலை எங் கேனும் இயங்குவது தொடர்பில் வரவேற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பரந்தன் இராசாயனத் தொழிற்சாலை எனில் அது பரந்தனில் இயங்க வேண்டும், கொழும்பில் இயங்குவதானால் அதைக் கொழும்பு இரசாயனத் தொழிற்சாலை எனப் பெயர் மாற்ற வேண்டும் என்று கூறியி ருந்தார்.
அதையடுத்துப் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என்ற பெயரில் இயங்கும் தொற் சாலையை உடனடியாகப் பரந்தனுக்கே கொண்டு செல்ல வேண்டும் என்று அரச தலைவர் உத்தரவிட்டார். அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ள போதும் அந்த விடயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.
அரச தலைவரின் இந்த வாக்குறுதியும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என்று நாடா ளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.