காவடிக்கு முள் குத்துவதற்கும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி பெறவேண்டுமாம்.. புதிய உத்தரவு.
கோவில்களில் காவடிக்கு முள் குத்துவதற்கு சுகாதார திணைக்களத்தின் அனுமதி பெ றவேண்டும். அவ்வாறான அனுமதி பெறாதவா்கள் முள் குத்த இடமளிக்கப்படாது என சாவகச்சோி சுகாதார பிாிவு அறிவித்துள்ளது.
காவடி எடுப்போரின் நலன் கருதி காவடி முள் வைத்திருப்போரும் முட்காவடி எடுக்க வுள்ளோரும் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே காவடி எடுக்க முடியுமென் றும் அனுமதி பெறாமல் நேர்த்திக்காகக் காவடி எடுக்க முயன்றால்
சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் எனவும் சுகாதாரத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர். சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தையொட்டி
வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு அறிவித்துள்ளனர். பொங்கல் உற்சவத் தையொட்டி தண்ணீர்ப் பந்தல் நடத்துவோர் பயன்படுத்தவுள்ள கிணறு தொடர்பான விவரங்களைச் சமர்ப்பித்து பொதுச் சுகாதார பரிசோதகரின் அறிக்கை
பெற்ற பின்னரே கிணற்றுநீர் பாவனைக்கு எடுக்க வேண்டும். கிணற்றிலிருந்து வாக னங்களில் கொண்டு வருபவர் தனிநபர் சுகாதாரம் தொடர்பான பரிசோதனை மேற் கொண்டு அறிக்கை பெற்றிருக்கவேண்டும்.
பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவ காலத்தில் வெப்பம் அதிகமாகக் காணப்படுவ தால் குழந்தைகள் சிறுவர்களுடன் வருவோர் சுத்தமான குடிதண்ணீரைக் கொண்டு வருமாறும் அறிவித்துள்ளனர்.
ஆலய வளாகத்தில் காணப்படும் தீர்த்தக் கேணிநீர் பொங்கல், அன்னதானம் போன் றவற்றுக்குப் பயன்படுத்துவதால் இராசயனப் பொருள்களான சவர்க்காரம் சம்போ பாவிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவித்து
மக்களின் சுகாதார நலன் கருதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அடி யார்களை ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுள்ளனர்.