புதிய பிறப்பு சான்றிதழ் வருகிறது, பிறப்பு சான்றிதழிலேயே அடையாள அட்டை இலக்கமும் இடம்பெறுமாம்..

ஆசிரியர் - Editor
புதிய பிறப்பு சான்றிதழ் வருகிறது, பிறப்பு சான்றிதழிலேயே அடையாள அட்டை இலக்கமும் இடம்பெறுமாம்..

ஆள்பதிவு திணைக்களம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம், ஓய்வூதிய திணைக்க ளம் மற்றும் பதிவாளா் நாயகம் ஆகியன இணைந்து பிறப்பு சான்றிதழ்களை 3 மொ ழிகளிலும் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பதிவாளா் நாயகம்   கூறியிருக்கின்றாா். 

இலத்திரனியல் தகவல்களை உள்ளடக்கிய மூன்று மொழிகளிலுமான பிறப்புச் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள தேவையற்ற விடயங்கள் புதிய பிறப்புச் சான்றிதழில் நீக்கப்படுகின்றன. தேசிய பிறப்புச் சான்றிதழ் என பெயரிடப்பட்டுள்ளது.

அதுடன், புதிய பிறப்புச் சான்றிதழை  அந்தக் குழந்தைக்கு 16 வயதாகும் போது வழங்கப்படவுள்ள தேசிய அடையாள அட்டையின் இலக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டையை வழங்கும் ஆள்பதிவுத் திணைக்களம், கடவுச்சீட்டை வழங்கும் குடிவரவு  குடியகல்வுத் திணைக்களம், 

ஓய்வூதியத் திணைக்களம் ஆகியவற்றுடன் பதிவாளர் நாயகத் திணைக்களம் இணைந்து இந்தப் புதிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படுகிறது” என பதிவாளர் நாயகம் சத்துர விதான தெரிவித்துள்ளார். அத்துடன், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை 

ஒருநாள் சேவையாகவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் பதிவாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Radio
×