கடுமையான வெய்யிலால் யாழ்.மாவட்டத்தில் 1வது உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor
கடுமையான வெய்யிலால் யாழ்.மாவட்டத்தில் 1வது உயிாிழப்பு..

யாழ்.மாவட்டத்தில் அதியுச்ச வெப்ப நிலையுடன் கூடிய கால நிலையினால் திடீரென மூா்ச்சையாகி விழுந்த குடும்பஸ்த்தா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வ ழியில் உயிாிழந்துள்ளாா். 

யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள் ளார். பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது  அவர் காணி க்குள் மயங்கி வீழந்துள்ளார். 

அதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

Radio
×