SuperTopAds

இன்னும் 10 தொடக்கம் 20 ஆண்டுகளுக்கே நமக்கு நிலத்தடி நீா், நிலத்தடி நீரை கண்ட கடைசி தலைமுறை நாமாக..

ஆசிரியர் - Editor I
இன்னும் 10 தொடக்கம் 20 ஆண்டுகளுக்கே நமக்கு நிலத்தடி நீா், நிலத்தடி நீரை கண்ட கடைசி தலைமுறை நாமாக..

வடமாகாண மக்கள் 10 ஆண்டுகள் தொடக்கம் 20 ஆண்டுகளுக்கு மட்டுமே நிலத்தடி நீரை பயன்படுத்த முடியும். என ஆய்வுகளின் மூலம் தொியவந்துள்ளது. 

இந்த விடயத்தை தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, 

ஆற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

வடக்கில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் சுமார் 60,000 பேர் நிலக்கீழ் நீரின் மூலமாக தமது நாளாந்த தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் பாளியாறு நீர்த்தேக்கத்தை நீர்மாணிக்கப் போவதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே குறித்த நீர்த்தேக்கத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எந்தவித பிரயோசனமும் இன்றி கடலில் கலக்கும் நீரை, கீழ் பாளியாறு நீர்த்தேக்கத்தில் சேமித்து வைக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த திட்டத்தின் மூலம் வவுனிக்குளம், கொள்ளவிளான்குளம், அடம்பன்குளம், மல்லாவிகுளம் போன்ற 

பிரதேசங்கள் நன்மையடையவுள்ளதாகவும் சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார்.