SuperTopAds

30 வருடங்கள் இயங்காத காசநோய் வைத்தியசாலையை மீள இயக்குவதற்கு விரும்பாத அரச அதிகாாிகள்..

ஆசிரியர் - Editor I
30 வருடங்கள் இயங்காத காசநோய் வைத்தியசாலையை மீள இயக்குவதற்கு விரும்பாத அரச அதிகாாிகள்..

இராணுவ கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டி காசநோய் வை த்தியசாலையை புனரமைப்பு செய்து மீள இயக்குவதற்கு அரச அதிகாாிகள் பாாிய த டையாக இருப்பதாக யாழ்.மாவட்ட காசநோய் தடுப்பு பிாிவு அதிகாாி மருத்துவா் சி.ய முனாநந்தா குற்றஞ்சாட்டியிருக்கின்றாா். 

யாழ்ப்பாணம்  பண்ணையில் அமைந்துள்ள  காசநோய் தடுப்பு அலகில்  ஊடகவிய லாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் தார். "இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசா லையானது கடந்த வருடம் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

எனினும் மயிலிட்டி காச நோய் வைத்தியசாலையினை சீரமைத்து மீள ஆரம்பிப்பதற் கான எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் அரச அதிகாரிகள் மேற்கொள்ளவில் லை. அந்தக் காணியினை வேறொரு தேவைக்கு பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. அதனை காசநோய் வைத்தியசாலையாக 

மீளப் பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் விரும்பவில்லை. எனினும் இந்த காச நோய் வைத்தியசாலை ஆரம்பிப்பதன் மூலமே வடக்கில் காச நோயை கட்டுப்படுத்த முடியு ம் - காச நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியும். அத்தோடு யாழ்ப் பாணத்தில் கடந்த வருடம் சுமார் 303 பேர் காச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோல் இந்த வருடம் சுமார் 66 பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் காசநோயால் பாதிக்கப்பட்ட 303 பேரில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்" என்றும் மாவட்ட காசநோய் தடுப்பு  அதிகாரி மருத்துவர் சி.ஜமுனானந்தா தெரிவித்தார்.