பொள்ளாச்சி சம்பவத்திற்கு பொங்கும் ஈழ தமிழா்களே..! முல்லைத்தீவில் நடந்தது தொியுமா? ஒரு பெண்ணின் கேள்வி..
பொள்ளாச்சியில் நடந்த மிகக்கேவலமான சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் சடுதியா க மனதில் ஞாபகம் வந்த சம்பவம் 2015 ம் ஆண்டில் முல்லைத்தீவு பாண்டியன்குளம் பிரதேசத்தில் நடந்த சம்பவம்.
பொள்ளாச்சியில் 1500 வீடியோ பாண்டியன் குளத்தில் 55 வீடியோ. பொள்ளாச்சியில் 200 பெண்கள் பாண்டியன் குளத்தில் 19 பெண்கள். மணலுக்கு பெர்மிட் , மரம் வெட்ட பெர்மிட் தாறன் என்று பாலியல் பேரம்பேசிய பிரதேச சபை உறுப்பினருக்கு
பாலியல் லஞ்சம் கொடுத்த பெண்களை அவர்கள் அந்த லஞ்சத்தை கொடுத்த போது இரகசியமாக பதிவு செய்து வெளியிட்ட வீடியோ சிடியினால் தற்கொலை செய்து கொண்ட இரண்டு பிள்ளைகளின் தாயார்.
மற்றும் தற்கொலைக்கு முயன்ற மூன்று பெண்களையும் மிகுதிப்பெண்களையும் ஆற்றுப்படுத்தும் குழுவில் நானும் இருந்தேன். கைது செய்ய முன்னர் நாட்டை விட்டு தப்பியோடிய பிரதேச சபை உறுப்பினருக்கெதிராக
அவர் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சி எந்தவொரு கண்டன அறிக்கையை விட்டிருக் கவில்லை. அவரை கைது செய்ய எந்தவித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. காதும் காதும் வச்ச போல விசயம் முடிந்திருந்தது.
அந்த கயவன் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக முல்லைத்தீவு HQ OIC யுடன் கடைசிவரை முரண்பட்டபடியே இருந்தேன்... கடைசியில் ஆளாளுக்கு இடமாற்றம் வந்து போனதும் அவன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினதும் தான்
கடைசியா நான் அறிந்தது. தொடர்புபட்ட பெண்களை இனம் கண்டு அவர்களை வேறெந்த தவறான முடிவையும் எடுக்க விடக்கூடாது உடனே அவர்களை அணுக வேண்டும் என்பதற்காக நான் பார்த்த அந்த அத்தனை வீடியோக்களையும்
விட பொள்ளாச்சி வீடியோ அதிகம் வேறுபட்டிருக்கவில்லை. ஆனால் அப்போது அது சோஷல் மீடியாக்களில் வைரலாக்கப்படவில்லை. ஒரு யாழ்ப்பாண செய்தி வலைத்தளம் அதை செய்தியாக்கி.
அந்த வீடியோவில் ஒரு சாம்பிளையும் போட்டிருந்தது. ஆனால் ஒரு சமூகசேவையாளரின் முயற்சியினால் அந்த வீடியோ சில மணி நேரங்களில் அழிக்கப்பட்டிருந்தது. இதிலும் நாங்கள் முன்னோடிகளே.