மன்னாா் மாவட்டத்தில் வசிக்காதவா்களின் பெயா் விபரங்கள் இப்போதும் வாக்காளா் பட்டியலில்..!

ஆசிரியர் - Editor I
மன்னாா் மாவட்டத்தில் வசிக்காதவா்களின் பெயா் விபரங்கள் இப்போதும் வாக்காளா் பட்டியலில்..!

மன்னார் மாவட்டத்தில் வசிக்காத பலர் போர் முடிந்து 10 ஆண்டுகளின் பின்னரும் வாக்காளர் பட்டியலில் பெயரைப் பதிவு செய்வதனை தேர்தல்கள் ஆணைக்குழு தடுத்து நிறுத்த வேண்டும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த பல ஆயிரம் மக்கள் இந்தியாவில் வசிக்கும் நிலையில் அவர்களது பெயர் விபரங்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வேறு மாவட்டத்தில் சொந்தமாக வீட்டில் தங்கியி ருப்போர் பின்தங்கிய மாவட்டமான மன்னார் மாவட்டத்தின் 

பதிவினை நீடிப்பதன் மூலம் எம்மு மாவட்டத்திற்கு கிடைக்கும் சொற்ப சலுகை களையும் அனுபவிக்க முயல்கின்றனர். இதிலும் குறிப்பாக எம் மாவட்டத்திலேயே வாக்காளர் பட்டியலை பேணும். அதேநேரம் வசதி வாய்ப்பான ஓர் மாவட்டத்தில் கல்வியினைத் தொடர்ந்துவிட்டு எமது மாவட்ட வாக்காளர்பட்டியல் மூலமே 

பல்கலைக்கழக தேர்வும் இடம்பெறுகின்றது. எனவே இவற்றினை அடிப்படையாக கொண்டு பிறமாவட்டத்தில் வசிப்போர் எம்மு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை தொடர்வதனை தடுக்குமாறு வேண்டுகின்றேன். என எழுத்தில் விண்ணப்பித்துள்ளா ர். குறித்த விடயத்தினை ஆராய்ந்த தேர்தல்கள் ஆணைக்குழு 

2018ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளபோதிலும் இதனை முறைப்பாடாக்கொண்டு அவற்றினை பரிசீலிக்க வேண்டும். அவ்வாறு பிற மாவட் டத்திற்கு வெளியில் நிரந்தரமாக வசிப்பவர்களின் பெயர் இருப்பின் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டே ஆக வேண்டும்.

அவ்வாறு பிற மாவட்டத்தில் இருந்தும் மன்னாரில் பதிவினை மேற்கொண்டுள்ள வர்களின் எண்ணிக்கை கண்டறியப்பட்டு அதன் பின்பே அதற்கான தீர்வினை கண்டறிவது. என ஆணைக்குழுவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு