முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 இடங்களை ஆக்கிரமிக்க தொல்லியல் திணைக்களம் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 இடங்களை ஆக்கிரமிக்க தொல்லியல் திணைக்களம் தீவிரம்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 இடங்கள் தமது ஆளுகையின் கீழ் அடங்குவதனால் அவற்றினை உடன் அளவீடு செய்து தருமாறு தொல்லியல் திணைக்களம் நில அள வைத் திணைக்களத்திடம் எழுத்தில் கோரியுள்ளனர். என வன்னி மாவட்ட நாடாளு    மன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராயா தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முதுபெரும் தமிழ்க் கிராமங்கள் பலவற்றில் காணப்படும் 40 இடங்கள் இவ்வாறு கோரப்பட்டுள்ளது. இவ்வாறு கோரப்படும் இடங்களில் பல தமிழர்களின் வாழ்விடங்களாகவும் மேலும் சில இடங்கள் பொருளாதார மையங்கள் மற்றும் வாழ்வியலிற்கான 

இடங்களும் உள் அடங்குவதோடு தமிழ் மக்களின் கலாச்சார மையங்களும் அடங்குகின்றன. இதில் குறிப்பாக வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பகுதியும் தமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியென குறித்த திணைக்களம் உரிமை கோருகின்றது. 

எனவே இதனை உடனடியாக இந்து கலாச்சார அமைச்சு மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல எண்ணியுள்ளோம். ஏனெனில் மகாவலி , வனஜீவராசிகள் திணைக்களம் , வனவளத் திணைக்களத்துடன் தொல்பொருல் திணைக்களமும் ஏட்டிக்குப் போட்டியாக 

நில அபகரிப்பில் ஈடுபட ஆரப்பித்து விட்டனர் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு