SuperTopAds

மலையக மக்களுக்கு 1000 சம்பள உயா்வு பெற்றுக் கொடுக்க வக்கில்லை, வடக்கு மக்களுக்கு ஆலோசனை..

ஆசிரியர் - Editor I
மலையக மக்களுக்கு 1000 சம்பள உயா்வு பெற்றுக் கொடுக்க வக்கில்லை, வடக்கு மக்களுக்கு ஆலோசனை..

ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன உட்பட, நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாட்டின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என அனைவருமே இனவாதிகள் எனவும், எவருமே எமது மக்களின் தேவைகளைத் தேடி வந்து பூர்த்தி செய்யப்போவதில்லை என பிரபாகணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டினுடைய அரசியலமைப்புச் சட்டம் எமக்கு எதிராக இருப்பதால், தற்போ துள்ள தமிழ் தலைவர்கள் இந்த நாட்டினுடைய ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ ஆகமுடியாதெனவும் தெரிவித்தார்.

எனவே இந்த பிரதமர்களிடமிருந்தும், ஜனாதிபதிகளிடமிருந்தும் எங்களுடையவர்க ளுக்குரியதை சண்டையிட்டு பெறக்கூடிய திராணியுள்ள மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 12.03.2019 அன்று முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுடனான சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வட பகுதிக்கு அதிகமாக விஜயம் செய்த ஜனாதிபதி இன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனதான். அதே நேரத்திலே இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவாக இருக்கலாம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாக இருக்கலாம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜயபக்சவாக இருக்கலாம் 

இவர்கள் யாருமே தேடிவந்து முன்பள்ளிகளை அடையாளங்கண்டு தங்கத் தட்டில் கொண்டுவந்து முன்பள்ளிகளுக்கான நிதியுதவிகளைச் செய்யப்போவதில் லை. எல்லோருமே இனவாதிகள்தான், இந்த மூவரும் இனவாதிகள்தான் இதைச் சொல்வதற்கு நான் பயப்படுவதுமில்லை.

ஆனால் பிரபா கணேசனுக்கோ, சம்பந்தனுக்கோ, விக்கினேஸ்வரனுக்கோ நாளை ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ ஆக முடியாது. இந்த நாட்டினுடைய அரசியலமைப்புச் சட்டம் எமக்கு எதிராக இருக்கின்றது. எனவே இந்த ஜனாதிபதிகளிடமிருந்து, இந்த பிரதமர்களிடமிருந்துதான் எமது மக்களுக்குத் தேவையானவற்றை நாங்கள் பெற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கின்றது.

ஆனால் அது சரியான முறையிலே செய்யவேண்டும். மிகவும் அருகில் சென்று சண்டையிட்டு எமது மக்களுக்குத் தேவையானவற்றினை பிடுங்கி எடுத்துக்கொண்டுவந்து கொடுக்கக்கூடிய திராணியுள்ள மக்கள் பிரதிநிதிகள் இருந்தால்தான் நாளை எமது வாழ்க்கைக்கு விடிவுகிடைக்கும் என்பதுதான் 

எனது கருத்தாக இருக்கின்றது. அதைத்தான் நானும் செய்துகொண்டிருக்கின்றேன். அதைத்தான் மற்ற மக்கள் பிரதிநிதிகளும் செயயவேண்டும். இல்லாவிட்டால் எதுவும் நடைபெறாது. வெறுமனே பாராளுமன்றம் செல்வதும், மாகாணசபை செல்வதும், ஊடகங்களில் கையைக் காட்டிப் பேசுவதும், 

வீர வசனங்கள் பேசுவதும், எமது முன்பள்ளி படிக்கின்ற பிள்ளைகளுக்கான எதிர்காலத்தை ஒருபோதும் அதனூடாக நிறைவேற்ற முடியாது. மாறாக எங்கே சென்று பேசவேண்டும், எதில் தட்டி எடுக்கவேண்டும் என்பதைச் சண்டையிட்டு எடுக்கக்கூடிய திராணி மிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள், 

மாகாணசபை உறுப்பினர்கள் உருவாகினல்தான் நிச்சயமாக இவற்றிற்கு ஒரு முடிவுட்டக்கூடியவாறு இருக்கும். அதனைத்தான் நான் முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கின்றேன். என்றார்.