சாதனை மாணவிகளுக்கு சத்தமில்லாமல் உதவி செய்த நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன்..
கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் இருவர் இலங்கையின் தேசிய மட்ட அணியில் இடம்பெற்று ஆசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளனர்.
அவர்கள் போட்டிகளுக்குச் செல்வதற்கு ஆயத்தமான போது, அவர்களுக்கான போக்கு வரத்து உள்ளிட்ட செலவுகளுக்கான பண உதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
தனது சொந்தப் பணத்திலிருந்து வழங்கியிருந்தார். இது இவ்வாறு இருக்க இம்மாண விகளுக்கு எவருமே உதவவில்லை எனவும் மேற்படி வீராங்கனைகளுக்கு எவ்வித உதவிகளும் வழங்காத பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்
வெற்றியீட்டியதனைக் கொண்டாடி மேடைகளில் பாராட்டிப் பேசி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீது காழ்ப்புணர்வு கொண்ட சிலர் ஊடகங்களுக்குச் செய்தி வழங்கி அநாகரிகமாகக் கருத்துரைத்து வருகின்றனர்.
உண்மை நிலை அறியாத சில ஊடகங்களும் அதனை தாம் நினைத்தபடி செய்தியாக வெளியிட்டுள்ளன. மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் இவ்வீராங்கனைகள் இருவருக்குமான போக்கு வரத்து உள்ளிட்ட
செலவுகளுக்காக 100,000 (ஒரு இலட்சம்) ரூபா பண உதவியாக தனது சொந்தப் பணத்திலிருந்து அவர்களிடம் வழங்கியிருந்தார். அதனை ஊடகங்களில் வெளியிட்டுத் புகழ் பெறுவதற்கும் அவர் விரும்பவில்லை.
அதனால் அவ்விடயம் செய்தியாக வெளிவரவுமில்லை.