எச்சாிக்கை..! வெப்பமான காலநிலையை சாதாரணமாக கணிப்பிடவேண்டாம்..

ஆசிரியர் - Editor I
எச்சாிக்கை..! வெப்பமான காலநிலையை சாதாரணமாக கணிப்பிடவேண்டாம்..

வடக்கில் மிகை வெப்பமான காலநிலை நிலவி வரும் நிலையில் பாடசாலை மாணவா் கள், வயதானவா்கள் உள்ளடங்கலாக பொதுமக்கள் மிக அவதானமாக இருக்குமாறு வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளா் ஆா்.கேதீஸ்வரன் எச்சாி க்கை விடுத்துள்ளாா். 

யாழ்.பண்ணையிலுள்ள மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் வடக்கில் அதிகரித்துள்ள வெப்ப நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகை யிலையே கேதீஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது.

வடக்கில் வெப்பமான சூழ்நிலை நிலவி வருகின்றது. இந்தக் கால நிலை மாற்றத்தி னால் பொது மக்கள் மத்தியிலே அவர்கள் உடல் நிலையில் பல பாதிப்புக்கள் ஏற்ப டலாம். குறிப்பாக மாவர்கள் மத்தியில் இது

அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. எவ்வகையான பாதிப்புக்கள் ஏற்படலாமென்று பார்த்தால் அதில் முதலாவதாக கை, கால் வயிற்றுப் பகுதிகளில் தசைப்பிடிப்பு ஏற்படலாம். அதிகமான சோர்வு ஏற்படலாம். 

அதிர்ச்சி நிலை ஏற்படலாம். இவ்வாறான தாக்கங்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் முதலுதவி செய்ய வேண்டும். அது எப்படியானதாக இருக்க வேண்டுமென்றால் முதலாவதாக வெய்யிலில் அல்லது வெளிச் சூழலிலே ஏதூவது 

வேலை செய்த கொண்டிருந்தால் அதனை உடனடியாக நிறுத்தி அவர்களை ஓய்வு நிலைக்கு கொண்டு வர வேண்டும். அவர்களை ஒரு குளிர்மையான ஒரு இடத்திலே ஓய்விற்கு கொண்டு வரவேண்டும், 

அவர்களுக்கு அதிகமான நீராகாரம் வழங்க வேண்டும். அதாவது நீர், அல்லது இளநீர் அல்லது பழரசங்கள் கொடுக்கலாம். அதிகளவு பானங்களை அடிக்கடி அருந்த வேண் டும். 

இதற்கு மேலும் முதலுதவி வழங்க வேண்டுமாக இருந்தால் அவர்களது உடலை ஒரு குளிர்ந்த நீரினால் கழுவலாம் அல்லது துடைக்கலாம். இதற்கும் மேலதிகமாக மருத்துவ உதவி அவர்களுக்குத் தேவைப்படுமென்றால் 

1990 என்ற அவசர அம்புலன்ஸ் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அம்புலன்ஸ் வண்டியை அழைத்து முதலுதவியை வழங்கி அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளலாம். 

இந்தக் காலப்பகுதிகளிலே குறிப்பாக பாடசாலைகளிலே நாங்கள் எதிர்பார்ப்பது பிள்ளைகளை இயலுமான வரைக்கும் வெளிச் சூழலிலே அதாவது புறச் சூழலிலே மதிய நேரம் வரைக்கும் விடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

விளையாட்டுப் போட்டிகளை இந்தக் காலப் பகுதிகளில் மதிய நேரங்களில் நடாத்துவதை இயலுமானவரை தவிர்த்துக் கொள்வது நல்லது.  ஏனைய விளையாட்டுப் போட்டிகள் விளையாட்டுக்கள் 

அல்லது ஏனைய புறச் செயற்பாடுகளை மதிய நேரங்களிலே வெளிப்புறச் சூழலிலே ஏற்பாடு செய்வதை இயலுமானவரை தவிரத்துக் கொள்வது நல்லது. மாணவர்களின் பாடசாலைகளில் உள்ள வகுப்பறைகளிலே இருக்கின்ற 

கதவுகள் ஐன்னல்களைத் திறந்து காற்றோட்டம் பூரணமாக வரத்தக்கதாக இருக்க வேண்டும். அப்படி எல்லாம் இருந்தால்; தாக்கத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும். மேலும் மின்விசிறிகள் உள்ள பாடசாலைகளாக இருந்தால் 

அங்கு வமின் விசிறிகளை இயக்க விடலாம். சில பாடசாலைகளிலே தகரக் கொட்டகைகள் கொண்ட வகுப்பறைகள் இருந்தால் அங்கே வெப்ப சூழல் அதிகமாக இருக்கும். அப்படியான பாடசாலைகளில் தற்காலிகமாக 

குளிர்மையான அல்லது வேறு வகுப்பறைகளுக்கு இடமாற்றுவது பொருத்தமானதாக இருக்கும்.  பிள்ளைகள் ஓய்வெடுப்பதற்காக அல்லது அதிகமான நீராகாரம் அருந்துவதற்காக இடைவேளைகளை கூடுதலாக வழங்கலாம். 

அதாவது இரண்டு தடவைகள் இடைவேளைகளை பாடசாலைகளில் வழங்கிக் கொள்ளலாம். அடுத்ததாக பிள்ளைகள் கழுத்துப் பட்டியை இறுக்கமாக அணிவதை கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளலாம். 

பாடசாலைக்கு வெளியிலே பிள்ளைகள் புறச் சூழலுக்குச் செல்ல வேண்டியிருந்தால் மதிய நேரங்களில் தொப்பிகளை அல்லது குடைகளைப் பாவித்தக் கொள்வது பொருத்தமானதாக இருக்கும். 

மேலும் கறுப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிரத்துக் கொள்வது நல்லம். ஏனென்றால் கறுப்பு நிற ஆடைகள் வெப்பத்தை உறிஞ்சக் கூடியவை. ஆதனால் மேலும் வெப்பத்தின் தாக்கம் உடலுக்கு ஏற்படும். 

ஆகவே கறுப்பு நிற ஆடைகள் அணிவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வழமை க்கு மேலதிகமாக அதிகளவு நீராகாரங்களை இந்தக் காலப் பகுதியிலே அருந்த வேண்டும். அதிலும் அடிக்கடி நீராகராம் அருந்த வேண்டும். 

அதற்கமைய நீர் இளநீர், பழரசங்களை தான் அருந்த வேண்டும். இயலுமான வரைக்கும் சோடா போன்ற குளிர்பானங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லம். ஒரு வகுப்பறையிலே ஒரு மாணவருக்கு இப்படியான அறிகுறிகள் ஏற்பட்டால்

 உடனடியாக அந்த வகுப்பறையின் ஆசிரியருக்கோ அல்லது அதிபருக்கோ அறிவித்து அவருக்கு உடனடியாக உரிய முதலுதவியை வழங்க வேண்டும். மேலதிக மருத்துவ உதவி தேவைப்பட்டால் அவசர அம்புலன்ஸ் சேவையை 

அழைத்து அங்கே முதலுதவையை வழங்கி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கே வைத்திய சேவையை வழங்ககக் கூடியதாக இருக்கும்.  எனவே மாணர்கள் மட்டுமல்ல பொது மக்கள் அனைவரும் இந்தக் காலப்பகுதியிலே 

மதிய நேரத்தில் வெளியில் செல்வதை அல்லது வெளிச் சூழலில் வேலை செய்வதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. இயலுமான வரைக்கும் உங்களுடைய அன்றாட வேலைகளை காலை வேளைகளில் அல்லது 

மாலை வேளைகளில் அதை ஒழுங்குபடுத்திக் கொள்வது பொருத்தமானதாக இருக்கும். இயலுமானவரைக்கும் மதிய வேளை நேரங்களில் வெளிப்புறச் சூழலில் வேலை செய்வதைத் தவிர்த்துக் கொள்வது மிக சாலச்

 சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு