ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு, கேப்பாபிலவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியா..?

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு, கேப்பாபிலவு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியா..?

முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்களின் காணிகளை மக்களிடம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா இராணுவ தளபதி ம கேஸ் சேனநாயக்கவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாா். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பின ர்களான மாவை சேனாதிராஜா, எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபா ல சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

அதில் கேப்பாப்பிலவு மக்கள் நீண்ட காலமாக நடத்தி வரும் போராட்டம் குறித்து அரசு பாராமுகமாக உள்ளது எனக் கூட்டமைப்புக் குழுவினர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.

இதனையடுத்து, கூட்டமைப்பினர் முன்னிலையில் இராணுவத் தளபதியைத் தொலை பேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி, உடனடியாக கேப்பாப்பிலவு மக்களின் கா ணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு