உடைந்த மதகை திருத்த ஒருவருடமாக நேரம் கிடைக்கவில்லை அதிகாாிகளுக்கு..

ஆசிரியர் - Editor I
உடைந்த மதகை திருத்த ஒருவருடமாக நேரம் கிடைக்கவில்லை அதிகாாிகளுக்கு..

வலி.வடக்கு கட்டுவன் -மயிலிட்டி வீதியில் மயிலிட்டி சந்தியில் இருந்து மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்துக்கும் இடையில் உள்ள வீதியின் மதகு உடைந்த நிலையில் உள்ளது. உடைந்து ஒருவாரமாகியுள்ள நிலையில் இவ் வீதியால் வாகனங்களில் பயணிக்க முடியாத ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கு மக்கள் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் கிடைத்த நிலையில் வீடுகள் அமைப்பதற்கான கட்டப் பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல முடியாது வேறு உள் வீதிகளை சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மதகினை உடனடியாக புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான (RDA) வீதியாக உள்ளதுடன் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்டு ஒருவருடமாகிறது. இதுவரை இந்த வீதி புனரமைக்கப்படவில்லை. இந்த வீதியின் நிலை குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியான நிலையில் அதிகாரிகள் திருத்துவோம் திருத்வோம் என கருத்து தெரிவிக்கின்றனரே தவிர வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை.

மேலும் கட்டுவன் மயிலிட்டி வீதி, தெல்லிப்பழை வைத்தியசாலையில் இருந்து வறுத்தலைவிளான் கட்டுவன் சந்தி, கட்டுவன் சந்தி - மல்லாகம் -சங்கானை வீதி , தையிட்டி ஆகிய வீதிகளை விரைந்து புனரமைத்து யாழ்.மாவட்ட அரச அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலர் ஆகியோர் கவனம் எடுக்குமாறு அங்கு மீள்குடியேறிய மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு