இரணைமடு வரலாற்றில் முதல் சாதனை, 15,500 ஏக்கா் நிலத்தில் விவசாயம செய்ய அனுமதி..

ஆசிரியர் - Editor I
இரணைமடு வரலாற்றில் முதல் சாதனை, 15,500 ஏக்கா் நிலத்தில் விவசாயம செய்ய அனுமதி..

இரணைமடுக் குளத்தின் வரலாற்றில் முதன் முறையாக 2019ஆம் ஆண்டின் சிறுபோ கத்தின்போது 15 ஆயிரத்து 500 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்க ப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று சிறுபோக கூட்டம் இடம்பெற்றது. இதன்போது மாவட்டச் செயலாளர் தனது தலைமையுரையில் புனர மைக்கப்பட்ட குளத்தில் முதலாவது சிறுபோக பயிற்செய்கை 

கூட்டம் எனவும் புனரமைப்பிற்கு பின் அதிகரிக்கப்பட்ட நீரால் விவசாயிகள் நன்மை பெறவுள்ளார்கள். அதற்காக புனரமைப்பில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.

பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி சுதாகரன்  கருத்து கூறுகையில் இன்றைய நீர்மட்டம் 33 அடி 10 அங்குலம் எனவும் இருக்கும் நீரை நெற்செய்கை ஏற்று நீர்ப்பாசனம் குடிநீர் தேவை என்பவற்றிற்கு வினைதிறனாக பயன்படுத்துவோம் 

என தெரிவித்தார். தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் விவசாய விரிவாக்க மாகாண உதவி பணிப்பாளர் காப்புறுதி பிரதி பணிப்பாளர் கமநலசேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் 

ஆகியோரின் கருத்துக்களும் இடம்பெற்றது. தொடர்ந்து 2019 ஆம் வருட சிறுபோக த்தில் 15,500 ஏக்கர் நெற் செய்கையும், 500 ஏக்கர் வயல் நிலத்திலான உப உணவு செய்கைக்கும் , 

600 ஏக்கர் திருவையாறு ஏற்று நீர்ப்பாசன செய்கைக்கும் நீர் பகிரப்பட்டு பயிர்ச் செய்கை கலண்டர் தயாரித்து வாசிக்கப்பட்டு ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட து. அத்துமீறிய பயிற்செய்கை நடவடிக்கையில் ஈடுபடுவோரின் வயல் நிலங்களின் 

எதிர்கால சிறுபோக நீர் உரிமை இடைநிறுத்தி வைப்பது என தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் 25% அத்துமீறிய அதிகரிப்பிற்கு 1 வருட நீர் உரிமையும், 50% அதிகரிப்பிற்கு 2 வருட நீர் உரிமையும், 

75% அதிகரிப்பிற்கு 3 வருட நீர் உரிமையும், 100% அதிகரிப்பிற்கு 4 வருட நீர் உரிமையும் இடைநிறுத்தி வைப்பது என தீர்மானிக்கப்பட்டதோடு இதையும் மிஞ்சுவோருக்கு மேற்படி நீர் உரிமை இடை நிறுத்தலுடன் 

பயிர் அழிப்பும் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கூடுதல் பொறுப்பை கமக்கார அமைப்புக்கள் பொறுப்பேற்று நிறைவேற்ற வேண்டும். இவ் அத்து மீறல்களிற்கு கமக்கார அமைப்பினர் உடந்தையாக இருப்பின் 

அவர்கள் அமைப்புக்களின் பொறுப்புக்களை வகிப்பதற்கு ஆயுட்கால தடை விதிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக அரசாங்க அதிபர் கூறுகையில் புதிய நீர் வரி இடாப்பு ஒன்றை தயாரிப்பதற்கு காணிக்கு பொறுப்பாக 

உள்ள மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து செயற்படுவது எனவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு