உடனடியாக அறிக்கை சமா்பிக்கும்படி வனவள திணைக்களத்திற்கு உத்தரவு..!
வவுனியா வடக்கு- ஊற்றுக்குளம் பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்காக சுமாா் 200 ஏக்கா் காடு வெட்டப்பட்டமை தொடா்பில் அறிக்கை சமா்பிக்குமாறு வன வள திணைக்களத்திற்கு வவுனியா மாவட்ட செயலா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
வவுனியா மாவட்டத்தில் ஊற்றுக்குளம் குளத்தினை வவுனியா கமநல சேவைத் திணைக்களம் புனரமைக்க அனுமதிக்காத வனவளத் திணைக்களம் அநுராதபுரம் கமநல சேவைத் திணைக்களம் புனரமைப்பதற்கு மட்டும்
அனுமதிப்பதன் உள்நோக்கம் என்ன எனவும் அப்பகுதியில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட காடு வெட்டப்பட்டு இரகசிய குடியேற்றத்திற்கு திட்டமிடப்படுவதாகவும் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட கிளைத் தலைவரும்
முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வைத்தியக் கலாநிதி ப.சத்தியலிங்கம் கடந்த மாதம் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பில் உண்மைத் தன்மையினை அறிக்கையிடுமாறு வவுனியா மாவட்டத்தின்
வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் மாவட்டச் செயலாளர் விளக்கம் கோரியிருந்தார். அதாவது ஊற்றுக்குளம் பகுதியில் இரகசியமாக மேற்கொள்ளத் திட்டமிடப்படும் சிங்கள குடியேற்ற மக்களின் வாழ்வாதாரத்திற்கான
வயல் செய்கையின் பயன்பாட்டிற்காகவே குறித்த குளம் இவ்வாறு இரகசியமாக புனரமைக்கப்படுவதாகவும் 200 குடும்பங்களை குடியமர்த்த காடுகள் வெட்டித் துப்பரவு செய்யப்பட்டுள்ளதோடு
அப்பகுதியில் இரு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் . குறிப்பாக வவுனியா வடக்கில் வெடிவைத்தகல் கிராமசேவகர் பிரிவில் கச்சல்சமணங்குளம் என்னும் தமிழ் பெயர்உடைய குளத்தினை தற்போது சப்புமஸ்கஸ்கொட எனப்
பெயர்மாற்றப்பட்டு புனரமைப்பு பணிகள் துரிதமாக இடம்பெறுகின்றது. இவ்வாறு இடம்பெறும் பணிகள் அனைத்திற்கும் அநுராதபுரத்தில் இருந்து இரகசியமாகவே பணியாளர்கள் காட்டு வழியாக அழைத்து வருகின்றனர்.
எனவே இவ்வாறு இரகசியமாக இடம்பெறுகின்ற பணி தொடர்பில் உடனடியாக தடுத்து நிறுத்த ஆவண செய்ய வேண்டும் எனவும் சத்தியலிங்கம் கோரியிருந்தார். குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து
பதிலளிக்குமாறு மாவட்டச் செயலாளர் பி்ரதேச செயராளரை கோரியிருந்தார். இதற்கு குறித்த பகுதியில் காடு துப்பரவு செய்தமை தொடர்பில் எவரும் தகவல் தெரிவிக்கவும் இல்லை.
இதுதொடர்பில் ஆராயச் சென்றவேளையிலும் எவருமே இருக்கவில்லை. அதேபோன் று இங்கே இடம்பெறும் குள அபிவிருத்தி தொடர்பாகவோ அல்லது புத்தர சிலை தொடர்பிலும் ஏதும் தரவுகள் எமக்கு கிட்டவில்லை
என பிரதேச செயலாளர் மழுப்பலான பதில் ஒன்றை வழங்கியிருந்தார். இதன் காரணமாக அடுத்த கட்டமாக குறித்த விடயம. தொடர்பில் காட்டுப் பகுதியினை நிர்வகிக்கும் திணைக்களம் என்ற வகையிலும்
அதற்கான பதிலினை எழுத்தில் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக அதிகாரி தெரிவித்தார்.