பிரதேசசபை உறுப்பினரை தொலைபேசியில் அச்சுறுத்திய பாடசாலை அதிபா், முறைப்பாடு பெற பொலிஸாா் மறுப்பு..

ஆசிரியர் - Editor I
பிரதேசசபை உறுப்பினரை தொலைபேசியில் அச்சுறுத்திய பாடசாலை அதிபா், முறைப்பாடு பெற பொலிஸாா் மறுப்பு..

ஓமந்தையில் மதுபானசாலை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கிய பாடசாலை அதிபா் ஒருவா் பிரதேசசபை உறுப்பினருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்திருக் கும் நிலையில் அது தொடா்பில் முறைப்பாடு பதிய பொலிஸாா் மறுத்துள்ளனா். 

ஓமந்தை பாடசாலை அதிபர் ஓமந்தைப்பகுதியில் மதுபான நிலையம் அமைப்பதற்கு சம்மதக்கடிதம் வழங்கியுள்ளதாக மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையா டலில் தெரிவிக்கப்பட்டது.

இவ்விடயங்களை அறிந்துகொண்ட அதிபர் நேற்று இரவு பிரதேச சபை உறுப்பினரின் தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்திய கடும் தொனியில் எச்சரித்துள்ளார். இ தையடுத்து அதிபரால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக 

முறைப்பாடு பதிவு செய்யச் சென்றார் உறுப்பினர். முறைப்பாடு மேற்கொள்வதால் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அதிபருக்கு பல முறைப்பாடுகள் காணப்படுகின்றன என்று சமரசம் செய்து 

பிரதேச சபை உறுப்பினரின் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியுள்ளனர் பொலிஸார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு