கிளிநொச்சியில் காப்புறுதி நிறுவன முகாமையாளா் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பல திடுக்கிடும் ஆதாரங்கள் சிக்கின..
கிளிநொச்சியில் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளா் வெட்டி படுகெலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பில் பல திடுக்கிடும் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகக் கூறியிருக்கும் பொலிஸாா்,
கொலையாளி தனது மனைவியுடன் தாகாத உறவில் ஈடுபட்டிருந்த குறித்த காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளரை கொலை செய்யபோகிறேன். என கூறிவிட்டே படு கொலை செய்தாா் என பொலிஸாா் கூறுகின்றனா்.
கிளிநொச்சி உதயநகரில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளரான வவுனியாவைச் சேர்ந்த பிறேமரமணன் (32) என்பவர் வெட்டிக் கொலைச் செய்யப்பட்டார்.
தனது மனைவியுடன் தகாத உறவை பேணினார் என்று குறிப்பிட்டே, வெளிநாட்டிலி ருந்து வந்த குடும்பத்தலைவர் ஒருவர், இந்த கொலையை புரிந்தார். சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்குத் திரும்பும்வேளை
விமான நிலையப் பொலிஸாரால் கடந்த புதன்கிழமை நள்ளிரவு கைது செய்யப் பட்டார். சந்தேகநபரை கிளிநொச்சிக்கு அழைத்துவந்த பொலிஸார், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
சந்தேகநபரை மேலும், 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கேட்டனர். நீதிமன்று அனுமதித்தது. அதனடிப்ப டையில் இரண்டு நாள்கள் தடுத்துவைத்து சந்தேகநபரிடம்
விசாரணைகள் நடத்தப்பட்டதுடன், அவரது தொலைபேசியில் சேமித்து வைக்கப்ப ட்டிருந்த தகவல்கள் ஒவ்வொன்றாக ஆராயப்பட்டன. எனக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பிறேமரமணன் எனது நீண்டநாள் நண்பர்.
அதனால், எனது மனைவியை அவரது காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்ற அனுப்பி வைத்தேன்.கிளிநொச்சியில் சீரான தொழில் வாய்ப்புக் கிடைக்காத்தால் பகரைன் நாட்டுக்கு தொழில் தேடிச் சென்றுவிட்டேன்.
நான் வெளிநாடு சென்றதும் எனது மனைவியுடன் பிறேமரமணன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். அவர்களது தொடர்பு அண்மைக்காலமாக மிகவும் நெருக்கம டைந்தது. எனது மனைவியுடன் தகாத உறவில் இருக்கும் புகைப்படம்,
வீடியோ எனக்கு அனுப்பிவைத்து பிறேமரமணன் என்னை மிகவும் மன உளைச்சலுக் குள்ளாக்கினார். எனது நண்பனான அவரை நான் பல தடவைகள் எச்சரித்தும் மன்றா டியும் பேசியிருந்தேன்.
எனது குடும்பத்தை சீரழிக்காதே, மனைவியை விட்டு விலகிவிடு என்று அவரிடம் கடைசிவரைக்கும் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் என்னை கோபமூட்டும் வகையிலான புகைப்படங்கள், வீடியோக்கள்,
குரல்பதிவுகளைத் தொடர்ச்சியாக அனுப்பிவைத்தார். அதனால் நாடு திரும்பிய நான், பிரேமரமணனை சந்திக்கப் போகின்றேன் என எனது மனைவிக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தினேன்’ என்று சந்தேகநபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் சந்தேகநபரின் மனைவி, அக்கராயன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, தனது கணவர் பிறேமரமணனைக் கொலை செய்யப் போகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், கொலை இடம்பெற்ற பின்னர் தான் அவ்வாறு சொல்லவில்லை என்கிறார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொல்லப்பட்ட பிரேமரமணனால், கைதான சந்தேகநபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புகைப்படங்கள், வீடியோக்கள், குரல்பதிவுகள் சந்தேகநபரின் தொலைபேசியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன
என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.